ஐ லவ் யூ அஜித் சார்.. பிரபல நடிகரின் உருக்கமான பதிவு.. குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு தெரியுமா?

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதனை ரசிகர்கள் பொங்கல் பண்டிகை போல் கொண்டாடி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான குட் பேட் அக்லி படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் சொல்ல வார்த்தைகளே இ்லலை என கமெண்ட் செய்து வருகின்றனர். தல தரிசனம் டக்கராக இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடித்திருக்கும் பிரசன்னா அஜித்தை பற்றி உருக்கமாக தெரிவித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியா இருக்கின்றனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் காட்சியை. பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆதிக் சம்பவம் பண்ணிட்டாரு என்றும் தெரிவிக்கின்றனர். எங்கு பார்ததாலும் நல்ல செய்தியாகவே வருகிறதாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே எதிர்பார்ப்பை எகிற செய்தது. அஜித்துடன் தொடர்ச்சியாக ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா இப்படத்தில் இணைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி செய்தியாகவும் அமைந்தது.

actor-prasanna-shares-memories-of-acting-with-ajith-in-the-film-good-bad-ugly

இப்படத்தில், அஜித் நடிப்பில் வெளியான தீனா, வாலி, அட்டகாசம், வில்லன், வேதாளம்,மங்காத்தா, வீரம் போன்ற படங்களின் ரெபரன்ஸ் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றன. ரெபரன்ஸ் காட்சியை வைத்து ஒரு டிரைலர் வெளியானதை வைத்து விமர்சனங்களும் எழுந்தன. மார்க் ஆண்டனி படத்தை போன்று இதிலும் கதை பெரிதாக இருக்க போவதில்லை. அஜித் ரசிகர்களுக்கு தேவையான கமர்ஷியல் பட்டாஸான வசனம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. அதேபோன்று சிம்ரனின் வாலி மொமண்ட்ஸையும் ஆதிக் ரவிச்சந்திரன் ரீ கிரியேட் செய்திருக்கிறார்.

அர்ஜூன் தாஸ் உருக்கம்: குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ் உருக்கமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். உங்களுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளையும் என் நினைவில் வைத்து போற்றுவேன். உங்கள் அன்பு, பெருந்தன்மை, அறிவுரைகள், உரையாடல்கள், கலகலப்பான அந்த நினைவுகள் என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன் என பதிவிட்டிருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் அர்ஜூன் தாஸை பாராட்டி வருகின்றனர். இதுதான் எங்க தல சார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

actor-prasanna-shares-memories-of-acting-with-ajith-in-the-film-good-bad-ugly

சுரேஷ் சந்திரா: குட் பேட் அக்லி படத்தை ரசிகர்களுடன் பார்க்க வந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ரசிகர் மன்றத்தை கலைத்த போதும் கலாட்டா பன்றீங்களே. பேசாமல் ரசிகர் மன்றம் ஒழுங்காக இருந்திருக்கலாம் என பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் அஜித் மீது அளவுக்கடந்த அன்பை வைத்திருக்கிறோம். இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள் அவரிடம் இதை சொல்லுங்க என்று பதிவிட்டு வருகின்றனர்.

actor-prasanna-shares-memories-of-acting-with-ajith-in-the-film-good-bad-ugly

பிரசன்னா ஹேப்பி: குட் பேட் அக்லி படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இருக்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலானது. பிரசன்னா அதி தீவிரமான அஜித் ரசிகர் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. பல நிகழ்ச்சிகளில் இதை ஓப்பனாக தெரிவித்திருக்கிறார். தற்போது அவருடன் இணைந்து நடித்திருப்பதை நினைத்து பெருமைப்படும் விதமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எனக்கு பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த அல்டிமேட் ஜெண்டில்மேனுடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன் ஐ லவ் யூ அஜித் சார் என பிரசன்னா குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X