அழகாக பியானோ வாசிக்கும் தனுஷ்...ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த பிரசன்னா!

சென்னை : கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை எட்டிப்பிடித்துவிட்ட தனுஷ் இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் #HappyBirthdayDhanush என் ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிராண்டாக்கி வருகின்றனர்.

நடிகர் பிரசன்னா, தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

தனுஷ்

தனுஷ்

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலைநிறுத்தி கொண்டவர் தனுஷ். ஆரம்பகால நாட்களில் எளிமையான கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் இன்று அனைவரும் பார்த்து வியக்கும் அளவுக்கு கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.

செம அப்டேட்

செம அப்டேட்

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து லைஃப் ஆப் பழம் பாடல், நானே வருவேன்' படத்திலிருந்து அப்டேட்டுடன் கூடிய போஸ்டர், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் வாத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை இந்தப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

பிரசன்னா

பிரசன்னா

இந்நிலையில், நடிகர் பிரசன்னா, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் அன்பு சகோதரர் தனுஷ் இன்னும் உயரவும், இன்னும் கூடுதலான சந்தோசத்தைப் பெறவும் வாழ்த்துகிறேன். அவருடைய பிறந்தநாளில் இதைவிட அழகாக அவரது ரசிகர்களுக்கு வேறென்ன பகிர முடியும்? இதைப் பகிர்ந்ததற்காக என்னைக் கொன்று விடாதீர்கள் சகோதரா என்று தனுஷ் பியானோ வசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறப்பான மனிதன்

அதே போல தனுஷின் அண்ணனும், திரைப்பட தயாரிப்பாளருமான செல்வராகவன் தனது ட்விட்டரில், "ஒரு சிறப்பான நபருக்கு சிறப்பான பிறந்தநாள். அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புச் சகோதரனே என்று நானே வருவேன் படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லவ் யூ சார்

வடசென்னை படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்த நடிகர் சரண், தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தனுஷ்ராஜா சார் நீங்கள் தான் எனக்கு ஊக்கம் முதல் நாள் முதல் உந்துதல் மற்றும் அனைத்தும். உங்களுடைய நிறைய அன்பு மற்றும் அரவணைப்புக்கு நன்றி. லவ் யூ சார் என கூறியுள்ளார். இன்னும் மற்ற பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X