மிரட்டலான போஸ்டர்... வித்தியாசமான லுக்கில் பிரசாந்த்… வெளியானது பர்ஸ்ட் லுக் !

சென்னை : அந்தகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப்பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் அந்தகன். ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி, சக்கை போடு போட்டு வசூலை வாரிக்குவித்தது.

Actor Prasanth Andhagan Movie First Look Poster out

அந்தாதூன் தமிழ் ரீமேக்கிற்கு தமிழில் அந்தகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான தியாகராஜன், தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரசாந்த்துடன், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Recommended Video

Prasanth Speech | என்னோட ரீஎன்ட்ரி! | Andhagan | Filmibeat Tamil

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என் காதல் என்ற முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளில் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் பாடல் மக்களை கவர்ந்தது.

Actor Prasanth Andhagan Movie First Look Poster out

தற்போது அந்தகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பிரசாந்த் கூலிங் கிளாசுடன் மாஸா இருக்க, கையில் துப்பாக்கிடன் ஆக்ரோஷமாக இருக்கிறார் சமுத்திரக்கனி. இந்த போஸ்டர் சற்றுமுன் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

மேலும் இந்த படம் ஜூலை மாதம் முதலாம் தேதி திரைக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கலைப்புலி எஸ். தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக வெளியிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X