GOAT: விஜய் ரசிகர்களை வான்டடா வெறுப்பேத்துறாரா பிரசாந்த்? கோட் படம் பற்றி என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: தளபதி விஜய், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் பயணிக்கவுள்ளார். இதனால் இவரது கடைசி இரண்டாவது படமாக கோட் படம் அமைந்தது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படம் வெளியானது யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. படம் தியேட்டர்களில் நல்ல வசூலைக் குவித்த நிலையில் அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரசாந்த் வெளியிட்டுள்ள வீடியோ தளபதி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கோட் படத்தின் மொத்த பட்ஜெட்டில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி என தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியிருதார். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தது மட்டும் இல்லாமல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடினார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்கள் மட்டும் இல்லாமல், விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி உருவாக்கப்படது.

விஜயகாந்த், த்ரிஷா, சிவகார்த்திகேயன் காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், படம் முழுக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. படம் ரிலீஸுக்கு முன்னர் படக்குழு வெளியிட்ட பாடல்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல் என்றால், அது மட்ட பாடல் மட்டும்தான். மற்ற பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் தியேட்டரில் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரிலீஸ்: படம் கடந்த மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், விஜய்யின் ஹை பட்ஜெட் படமும் ஒருமாதத்தில் அதாவது படம் தியேட்டரில் வெளியாகி நான்கு வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வசூல்: மேலும் படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் இல்லாமல் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 200 கோடிகளை அள்ளி வசூல் சாதனை படைத்ததாக படக்குழு தெரிவித்தது. அதேபோல், வசூலாக மட்டும் இல்லாமல், தியேட்டரில் ஷேர் மட்டும் கோட் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் அள்ளிக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். படம் மொத்தத்தில் பிரமாண்டமான வசூல் வெற்றியைக் கொடுத்துள்ளது.
ஓடிடி : இந்நிலையில் படம் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் 3 மணி நேரம் ஒரு நிமிடம். இதுதான் தற்போது நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் படம் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது என நடிகர் பிரசாந்த் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும், “ என்னோட படம் கோட், நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது” எனக் கூறுகின்றார். இது விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேற்றியுள்ளது.
பிரசாந்த்: கோட் படத்தில் நடித்து, அதன் மூலம் தனது 50வது படமான அந்தகன் படத்திற்கு விஜய்யை வைத்து புரோமோசன் செய்து கொண்ட பிரசாந்த், கோட் படத்தில் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததைப்போல், 'என்னுடைய படம்’ எனக் கூறிப்பிடுவது விஜய் ரசிகர்களை கொஞ்சம் ஆத்திரமடையவும் செய்துள்ளது. எனவே கமெண்ட் செக்ஷனில் பிரசாந்த்தை, விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றார்கள்.


Click it and Unblock the Notifications











