Actor Prashanth: தங்கலானுடன் மோதத் தயாரான அந்தகன்.. ரிலீஸ் தேதியை அறிவித்த பிரஷாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அந்தகன் படத்தை அவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் நீண்ட காலங்களாகவே ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் இன்றைய தினம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரஷாந்த் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அந்தகன் படத்தின் ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி என அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் வரும் மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே விக்ரமின் தங்கலான் படமும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Prashanth Andhagan movie tamil cinema

நடிகர் பிரஷாந்த்: பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் அந்தகன். பிரஷாந்த் நடிப்பில் அவரது அப்பாவும் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தககன் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராகி வந்தது. இந்த படத்தில் பிரஷாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக்,, யோகி பாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

அந்தகன் ரிலீஸ்: இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதையொட்டி படத்தின் போஸ்டருடன் நடிகர் பிரசாந்த் ரிலீஸ் செய்தியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்து பா ரஞ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படமும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விக்ரமுடன் மோத பிரசாந்த் தயாராகியுள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ்: தங்கலான் மற்றும் அந்தககன் என இரு படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த இரு படங்களும் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தங்களான் படமும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. இந்நிலையில் அந்தகன் படமும் அன்றைய தினமே ரிலீசாக உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் கண் தெரியாத இளைஞராக பிரசாந்த் நடித்துள்ளார்.

மிரட்டிய ட்ரெயிலர்: இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தகன் பிரசாந்தின் ரீ-என்ட்ரி படமாக வெளியாகவுள்ள நிலையில், படம் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப்படம் மட்டுமில்லாமல் விக்ரமின் தங்கலான் படமும் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X