வயநாடு பேரழிவு.. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் பத்தாது.. உடைந்து பேசிய நடிகர் பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரசாந்த், வயநாடு பேரழிவுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது, உறவுகளை இழந்து வாடும் உறவுகளுக்கு, எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க என்று கூறியுள்ளர்.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம் ஹிந்தியில் 2018 வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார். இப்படத்தை முதலில், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிட்க் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து, தியாகராஜனே இப்படத்தை இயக்கி உள்ளார்.

prashanth

அந்தகன் 9ந் தேதி ரிலீஸ்: இப்படத்தின் அந்தகன் எனப் பெயரிடப்பட்டு படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வர்சி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுற வைத்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 9ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

டிரைலருக்கு வரவேற்பு: மதுரையில் நடைபெற்ற பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த், படத்தின் டிரைலருக்கே நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இத்தனை நாள் பிரேக் எடுத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. டிரைலரை பார்த்த பலர் படம் க்ரைமா, மிஸ்ட்ரியாக என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது படத்தை நல்லபடியாக முடித்து இருக்கிறோம் படம் ஆகஸ்ட் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது அனைவரும் படத்தை பாருங்க.

வயநாடு கோரம்: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் வயநாடு சம்பவத்திற்கு விக்ரம், கமல் உதவி செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரசாந்த், உயிரிழந்தவர்களுக்கு எது ஆழ்ந்த அனுதாபங்கள், இதற்கு எவ்வளவு தான் ஆறுதல் சொன்னாலும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் கேள்விபட்டு நான் மிகவும் மனம் உடைந்துபோனேன், யார் யாரால் உதவி செய்ய முடியுமோ தயவு செய்து பண்ணுங்க, நாங்களும் உதவு செய்வோம். இதற்கு எவ்வளவு உதவி செய்தாலும் போதாது, இதனால், சின்ன உதவியாக இருந்தாலும் தயங்காமல் உதவி செய்யுங்கள் இதுதான் என் வேண்டுகோள் என்று அந்த பேட்டியில் பிரசாந்த் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X