twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது பெற்ற அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த் - ரிஸ்க் எடுக்கும் தியாகராஜன்

    |

    சென்னை: பாலிவுட்டில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். தேசிய விருது பெற்ற இந்த படத்தில் பிரசாந்த் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

    சமீப காலங்களாக நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே படுதோல்வியையே சந்தித்து வருகின்றன. கடைசியாக இவர் கொடுத்த வெற்றிப்படம் என்றால் அது அநேகமாக 2000மாவது ஆண்டில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன் படமாகத்தான் இருக்கவேண்டும்.

    தரமான சம்பவம்.. மதுமிதா மாஸ்.. இதான் முதல் அடி தர்ஷனுக்கு.. ஓவர் கான்ஃபிடன்ஸ் சொதப்பிடும் தம்பி! தரமான சம்பவம்.. மதுமிதா மாஸ்.. இதான் முதல் அடி தர்ஷனுக்கு.. ஓவர் கான்ஃபிடன்ஸ் சொதப்பிடும் தம்பி!

    லண்டன்

    லண்டன்

    அதன் பின் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்களுக்கு பலத்த அடியை கொடுத்தன என்று தான் சொல்ல வேண்டும். இடையில் 2005ஆம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில் இவர் நடித்த லண்டன் படம் ஒரளவுக்கு வெற்றி பெற்றது என்று மட்டுமே சொல்ல வேண்டும். அதுவும் கூட வடிவேல், பாண்டியராஜன், மணிவண்ணன், மயில்சாமி போன்றவர்கள் இருந்ததால் தான் படம் தப்பியது.

    பிரசாந்த் தோல்வி முகம்

    பிரசாந்த் தோல்வி முகம்

    இதன் காரணமாகவோ என்னவோ, தயாரிப்பாளர்கள் அனைவருமே பிரசாந்த் என்றாலே தள்ளியே நிற்கின்றனர். தன் மகனுடைய மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேறு வழியில்லாத இவர் தந்தை தியாகராஜன், தானே படங்களை தயாரித்து இயக்கி வெளியிட்டார். அந்தப் படங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வியது என்று தான் சொல்லவேண்டும்.

    அந்தாதுன்

    அந்தாதுன்

    இருந்தும் விக்ரமாதித்தன் மனம் தளராமல் முருங்கை மரத்தில் ஏறியது போல், தியாகராஜனும் மனம் தளராமல் பிரசாந்த்தை வைத்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து இயக்கி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இந்திப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, தன் மகனை தயாரித்து இயக்கப் போகிறார்.

    தேசிய விருது பெற்ற படம்

    தேசிய விருது பெற்ற படம்

    இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கப்போகிறார்.

    பியானோ மாஸ்டர்

    பியானோ மாஸ்டர்

    சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். ஏற்கெனவே, தியாகராஜன் ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தியாகராஜன் பேசுகையில், அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது.

    பொருத்தமான கேரக்டர்

    பொருத்தமான கேரக்டர்

    நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும் என்றார். தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.

    English summary
    Actor Thyagarajan has bought the rights to remake the Tamil film 'Aadhaadun' which was released at the Melbourne Indian Film Festival recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X