குஷியில் டாப் ஸ்டார் ரசிகர்கள்.. பிரசாந்த்-சிம்ரன் நடிப்பில் "அந்தகன்" மாஸ் ரிலீஸ்

சென்னை: வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவர் தந்தை நடிகர் தியாகராஜன்.

பிரசாந்த் ஆரம்ப காலத்தில் தொடர் வெற்றிகளை தந்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். அஜித்-விஜய் வருகைக்குப் பிறகு மெல்ல அவரது படங்களின் வெற்றி சதவிகிதம் குறைய தொடங்கியது.

அச்சமயத்தில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது. இடையில் சில காலம் அவர் படம் ஏதும் நடிக்காமல் இருந்தார். அவர் கடைசியாக திரையில் தோன்றிய படம் ' வினய விதய ராம ' என்ற தெலுங்கு திரைப்படம். ராம் சரன் அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்போது அவர் நடிக்கும் படம் அந்தகன். அவரது தந்தை அந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு பிரசாந்த் உட்பட படக்குழுவினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான ' அந்ததூண் " படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் இந்தியில் வசூல் சாதனை செய்த படம். தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இந்த படத்தின் ரீமேக் உரிமைகள் வாங்கப்பட்டு படம் உருவாகி கொண்டிருக்கிறது.பிரசாந்த் தமிழ் சினிமாவில் செய்த பல நல்ல கதைகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே . நிறைய திறமைகள் இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாமல் போனது ஒவ்வொரு நடிகனுக்கு வெல்வேறு காலகட்டங்களில் நடந்து கொண்டு தான் இருக்குகிறது.

சிம்ரன் பிரசாந்த் மீண்டும் இணையும்

சிம்ரன் பிரசாந்த் மீண்டும் இணையும்

கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த பிரசாந்த் சிம்ரன் ஜோடி இந்த படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இந்த முறை சிம்ரன் பிரசாந்துக்கு நாயகியாக இல்லாமல் வில்லியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்தேன் ரசித்தேன் படத்திலும் சிம்ரன் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில்தான் வந்திருப்பார். சிம்ரன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

முதலில் மோகன் ராஜா

முதலில் மோகன் ராஜா

அந்தகன் படத்தை முதலில் இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மோகன் ராஜா. இவர் ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர். படத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தியாகராஜன் உடன் கருத்து வேறுபாடுகள் வர படத்திலிருந்து விலகினார் மோகன் ராஜா. பிறகு பிரசாந்த் தந்தை தியாகராஜன் டைரக்ஷன் பொறுப்பை ஏற்று படத்தை எடுத்து முடித்துள்ளார்.

விநியோக வித்தகர் கலைப்புலி தாணு

விநியோக வித்தகர் கலைப்புலி தாணு

தமிழில் மிகப் பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தகன் படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருப்பது பற்றி தெரிவித்துள்ளார். ஒரு படத்தை எப்படி எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர் கலைப்புலி தாணு. அந்தகன் படத்தை தாணு பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்ப்பார் என்று படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள் . பிரசாந்த் சந்தோஷத்திற்கு மிக முக்கிய காரணம் இவர் தான் என்பது குறிப்பிட தக்கது. இந்த படம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X