Actor Prashanth: பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் பிரஷாந்த்.. அட கூட இந்த நடிகையா?

சென்னை: நடிகர் பிரஷாந்த் நீண்ட காலங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக அந்தகன் படம் ரிலீசாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் விக்ரமின் தங்கலான் படத்துடன் நேரடியாக மோத உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பிரஷாந்த் ஈடுபட்டு வருகிறார்.

அந்தகன் படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்களை கடந்து சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் நடிகர் பிரஷாந்த் ஈடுபட்டு வருகிறார்.

Prashanth Madonna Sebastian Andhagan movie

நடிகர் பிரஷாந்த்: நடிகர் பிரஷாந்த் பல ஆண்டுகளாக சினிமாவில் நாயகனாக நடித்து வந்தவர்/ வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் நாயகனாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் ஷங்கரின் ஜீன்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்த பிரஷாந்த், ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல் விலகினார். இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கத்தில் அந்தகண் படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரசாந்த்.

அந்தகன் படம்: கடந்த 2018ம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 15 தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகவுள்ள அந்தகன் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து அந்தகன் படத்தின் பாடலொன்றை நடிகர் விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து வெளியிட்டனர். தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து பிரஷாந்த் பங்கேற்று வருகிறார்.

Actor Prashanth joins Famous jewelry shop opening

நகைக்கடை திறப்புவிழாவில் பிரஷாந்த்: இந்நிலையில் தற்போது பிரபல நகைக்கடையான ஜோயாலுக்காசின் வேளச்சேரி கிளையின் திறப்பு விழாவில் பிரசாந்த் பங்கேற்றுள்ளார். மிகவும் உடல் எடை ஏறியிருந்த பிரஷாந்த் இந்த நிகழ்ச்சியில் உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாக காணப்பட்டார். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியனும் பங்கேற்றிருந்தார். இந்த கடை திறப்பு விழாவில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கண் தெரியாதவராக பிரஷாந்த்: பாலிவுட்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறிய அந்தாதூன் படத்தை காட்டிலும் இந்தப் படத்தில் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் அதிகமான விஷயங்களை சேர்த்துள்ளதாக படத்தின் இயக்குநரும் பிரஷாந்தின் அப்பாவுமான தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அந்தகன் படத்தை உருவாக்க தான் அதிகமான சிரமங்களை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் கண் தெரியாத பியானோ வாசிப்பாளராக பிரஷாந்த் நடித்துள்ள நிலையில், படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X