விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரஷாந்த்.. இதெல்லாம் முன்னாடியே பண்ணியாச்சு.. அந்தகன் ஹீரோ ஓபன்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கோட் படத்தில் கேமியோ கேரக்டர்களில் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் முன்னதாக படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் 3வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Vijay The greatest of all time Venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் என அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளன. இந்த இரண்டு பாடல்களையும் நடிகர் விஜய் பாடியுள்ளார். இதில் முதல் பாடலான விசில் போடு பாடலில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் என அனைவரும் சமமாக ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது.

பிரஷாந்த் இன்டர்வியூ: இது குறித்து தற்போது நடிகர் பிரஷாந்த் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பிரஷாந்தின் அந்தகன் படம் ரிலீசாக உள்ளது. அவரது சொந்த பேனரில் அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் பிரஷாந்துடன் இணைந்து பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் பிரஷாந்த் கண் தெரியாதவராக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ளதாக பிரஷாந்த் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மல்ட்டி ஸ்டாரர் படம்: இந்த சிங்கிள் கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரஷாந்த் கோட் படத்தில் தான் நடிகர் விஜய்யுடன் இணைந்து மல்டி ஸ்டார் படத்தில் நடித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். தான் முன்னதாகவே திருடா திருடா, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் மல்டி ஸ்டாரர் சப்ஜெக்டில் நடித்துள்ளதாகவும் இந்த படம் இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளதாகவும் பிரஷாந்த் கூறியுள்ளார். முன்னதாக விசில் போடு பாடலில் விஜய், பிரபுதேவா உள்ளிட்டவர்களுடன் இணைந்து சமமாக ஆட்டம் போட்டது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்த பிரஷாந்த் இதற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ராஜு சுந்தரம் மாஸ்டர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

https://x.com/ActorVijayTeam/status/1814869590494884316

அந்தகன் ரிலீஸ்: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தங்கலான் உள்ளிட்ட படங்களுடன் இணைந்து பிரஷாந்தின் அந்தகன் படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில்தான் பிரஷாந்த் பேசியுள்ளார். படங்களுக்கு இடையில் போட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோட் படம் குறித்து பேசிய பிரஷாந்த், இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X