Prashanth: வருஷத்துக்கு 4 படங்கள்ல நடிக்கனும்.. எல்லா டைரக்டரோடயும் நடிக்கனும்.. பிரஷாந்தின் ஆசை!

சென்னை: நடிகர் பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகியிருந்த நிலையில் அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தகன் படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் பிரசாந்த் இணைந்து நடித்துள்ள கோட் படமும் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

கோட் படமும் பிரஷாந்திற்கு மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற கதைகளை கேட்டு வருவதாக பிரஷாந்த் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Prashanth Andhagan movie GOAT movie

நடிகர் பிரஷாந்த்: கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகி இருந்த நடிகர் பிரஷாந்த் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தகன் படம் வெளியாகி அதிரடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் கண் தெரியாதவராக நடித்திருந்தார் பிரஷாந்த். இந்த படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை அவரது அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக திட்டமிட்டுள்ளார் நடிகர் பிரஷாந்த். வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யுடன் பிரஷாந்த் இணைந்து நடித்துள்ள கோட் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பிரஷாந்தின் ஆசை: கோட் படம் பிரஷாந்திற்கு மேலும் வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் பிரஷாந்த் தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தான் இந்தப் படங்களை தொடர்ந்து ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறப்பான பல இயக்குனர்கள் உள்ளதாகவும் அவர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடிக்க தான் விரும்புவதாகவும் பிரஷாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களுக்காக தான் கதைகளை கேட்டு வருவதாகவும் பிரஷாந்த் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி: வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் பிரஷாந்த். முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பிரஷாந்திற்கு கிடைத்தது. உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பிரஷாந்த். ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வந்த பிரஷாந்த், ஒரு கட்டத்தில் பர்சனல் விஷயங்களால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

அதிரடி ரீ-என்ட்ரி: இந்நிலையில் தற்போது பிரஷாந்த் மீண்டும் அதிரடியாக களமிறங்கியுள்ளார். அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாக அவரது அப்பா தியாகராஜன் கூறியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பிரஷாந்தை மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக பார்க்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். முன்னதாகவும் இதேபோன்ற கருத்தை படத்தின் ரிலீசையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் பிரஷாந்த் பேசியிருந்தார். அந்தகன் படத்தின் வெற்றி ஒரு துவக்கம்தான் என்றும் தொடர்ந்துபல படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X