Actor Prashanth: GOAT தளபதி விஜய் படம்தான்.. இருந்தாலும்.. பிரஷாந்த் பகிர்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் முன்னதாக கேரளா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ள நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட மாஸ் கூட்டணி இணைந்துள்ள நிலையில் படம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை பிரஷாந்த் கொடுத்து வருகிறார். இவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Actor Prashanth opens up about Vijay s GOAT movie and director Venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் படக்குழுவினருடன் இணைந்து நடித்து வரும் நடிகர் விஜய், அங்கு ஸ்கேட்டிங் பயிற்சி செய்த வீடியோவை சமீபத்தில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருந்தார். முன்னதாக படத்தின் சூட்டிங் நடக்கும் லொகேஷனையும் அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

படத்தின் ரிலீஸ் அறிவிப்பு: இந்த படத்தின் ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியிடப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் நடித்து வருகிறார். இதன் போஸ்டர்களும் முன்னதாக வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

படத்தின் சுவாரஸ்யங்கள்: இந்தப் படத்தில் வில்லனாக மைக் மோகன் இணைந்துள்ளதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கேரளா, ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த சுவாரசியங்களை பட குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று முன்னதாக வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் தங்களது பேட்டிகளில் கூறியிருந்தனர். இதனிடையே இதே கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய பிறந்த நாளையொட்டி பேட்டி ஒன்றில் பிரசாந்த் உறுதிப்படுத்தியிருந்தார்.

GOAT விஜய் படம்தான்: இந்நிலையில் தற்போது அவரது மற்றொரு பேட்டியில் படத்தின் பல சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். படம் குறித்து தன்னிடம் வெங்கட் பிரபு பேசியபோது இது மல்டி ஸ்டாரர் படம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இது விஜய்யின் படம் தான் என்ற போதிலும் தனக்கும் பிரபுதேவா உள்ளிட்டவர்களுக்கும் படத்தில் சமமான ஸ்பேஸ் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்கும் இந்த படத்தில் வெங்கட் பிரபு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த அடுத்தடுத்த பேட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சூழலில் படத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிஜிஎம் கிங் என்று கூறப்படும் யுவன் சங்கர் ராஜா, இந்த படத்திலும் தன்னுடைய சிறப்பான பிஜிஎம்ஐ வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X