ஆரம்பமானது அந்தகன் படப்பிடிப்பு.. மகன் பிரசாந்த்தை இயக்குகிறார் தியாகராஜன்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற அந்தாதூன் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இயக்குநர் தியாகராஜன் கைப்பற்றினார்.

மோகன் ராஜாவை வைத்து அந்த படத்தை இயக்கப் போவதாக அறிவித்தனர். பின்னர் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி விட்டார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய இயக்குநர் ஜெஜெ பிரெட்ரிக் தான் இயக்குநர் என்றனர். தற்போது அவரும் வெளியேறிவிட்டார்.

மீண்டும் பிரசாந்த்

மீண்டும் பிரசாந்த்

90களில் தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் என பேக் டு பேக் ஹிட் கொடுத்த பிரசாந்த் ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போய்விட்டார். மீண்டும் வின்னர், ஜாம்பவான் என அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

அந்தாதூன் ரீமேக்

அந்தாதூன் ரீமேக்

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய இயக்குநர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து அந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். தனி ஒருவன் வெற்றிக்கு பின்னர் மோகன் ராஜாவை வைத்து அந்தாதூன் ரீமேக்கை உருவாக்க திட்டமிட்டார்.

மோகன் ராஜா விலகல்

மோகன் ராஜா விலகல்

ஆனால், அறிவிப்பு வெளியான கொஞ்ச நாட்களிலேயே தான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக மோகன் ராஜா அறிவித்து விட்டார். அதன் பின்னர் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, தியாகராஜன், பாக்கியராஜ், பார்த்திபன் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய இயக்குநர் ஜெஜெ பிரெட்ரிக்கை வைத்து படத்தை ஆரம்பித்தார்.

அந்தகன் டைட்டில்

அந்தகன் டைட்டில்

அந்தாதூன் போலவே டைட்டில் இருக்க வேண்டும் என்பதால் அந்தகன் என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. தபு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரனை ஒப்பந்தம் செய்தனர். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நான் இயக்கவில்லை

நான் இயக்கவில்லை

இந்நிலையில், அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமான நிலையில், இயக்குநர் பிரெட்ரிக் அதிரடியாக தற்போது ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். நண்பர்களே அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை. அந்த படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டு இவரும் நைஸாக கழண்டு கொண்டார்.

யார் இயக்குநர்

யார் இயக்குநர்

நடிகர் பிரசாந்தின் அந்தகன் படத்தை அப்பா தியாகராஜனே இயக்கப் போகிறார் என்கிற அதிரடியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்தகன் படம் அந்தாதூன் படம் அளவுக்கு வெளியாகுமா? வெற்றி பெறுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X