Actor Prashanth: விஜய்யின் GOAT படம்.. உற்சாகத்துடன் பேசிய நடிகர் பிரஷாந்த்!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது The greatest of all time படம். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து துருக்கி, இலங்கை, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளது. அப்பா -மகன் கெட்டப்பில் இந்தப் படத்தில் விஜய் நடித்துவருகிறார். டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகிவருகிறது. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி படம் குறித்த அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை ரசகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இணைந்திருந்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு, கோடைக் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் பணியாற்றி வருகின்றனர். முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்த நிலையில், இந்தப்படமும் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

Actor Prashanth updates about Vijays The greatest of all time movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகிவருகிறது The greatest of all time படம். இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இந்தப் படத்தில் விஜய் இணைந்துள்ளார். எப்போதும் கலாட்டாவாக படங்களை இயக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இணைந்தது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் விமர்சகங்களுக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது. இந்த காரணத்தினாலேயே GOAT படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக துருக்கி, இலங்கை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்படவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The greatest of all time படம்: GOAT பட,த்தில் விஜய் அப்பா, மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்தும்வகையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இவ்வளவு நடிகர்கள் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக பேச வைத்துள்ளது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளன.

பிரஷாந்த் உற்சாகம்: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் பிரஷாந்த் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவதும் படத்திற்கு மிகப்பெரிய அட்ராக்ஷனை கொடுத்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரில் மழை பாதித்தவர்களுக்கு உதவிகளை செய்வதற்காக சென்ற பிரஷாந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் GOAT படம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து பேசிய அவர் GOAT படத்தின் சூட்டிங் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த புத்தாண்டு அனைவருக்கும் மிகச்சிறப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய தான் முருகரை வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்தவகையில் தான் உதவி செய்ததாகவும் பிரஷாந்த் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் இணைந்திருந்த போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிகப்பெரிய ஹீரோவாக இருந்த பிரஷாந்த் இந்தப்படத்தில் எந்தமாதிரியான கேரக்டரில் நடித்திருப்பார் என்று அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X