அடுத்தப்படத்தில் பிரபல நடிகையுடன் இணையும் நடிகர் பிராசாந்த்.. யாருன்னு பாருங்க மக்களே!
சென்னை: நடிகர் பிரசாந்த் தனது அடுத்தப்படத்தில் பிரபல முன்னணி நடிகையுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
நடிகர் பிரசாந்த் இந்தியில் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளார்.
படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு தயாராகி வருகிறார் நடிகர் பிரசாந்த்.

நடிகை சமந்தா
இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் அடுத்த படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநரான அஷ்வின் சரவணன் இயக்கும் படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பேசிய நடிகர் பிரசாந்த், அடுத்து வரும் தொடர்பாக அஷ்வின் சரவணனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். மற்ற தகவல்களை இப்போதே கூறுவது, ரொம்பவும் முன்கூட்டியது என நினைக்கிறேன்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவிப்பார்கள். என்றார்.

மாயா வரிசையில்
மேலும் தான் நிறைய ஸ்கிரிப்ட்களைக் கேட்டு வருவதாகவும், ஒவ்வொன்றாக கையெழுத்திடுவதாகவும் பிரசாந்த் கூறினார். இயக்குநர் அஷ்வின் சரவணன், சமந்தாவை வைத்து இயக்கும் இந்தப் படம் ஒரு திகில்-த்ரில்லர் என்று கூறப்படுகிறது, இது அவரது முதல் படமான மாயா படத்தின் வரிசையில் இருக்கும் என கூறுப்படுகிறது.

டேஹ்ராடூன்
இந்த படம் ஒரு பெண்ணை மையமாக வைத்து இருப்பதாகவும், அதன் முக்கிய காட்சிகள் டேஹ்ராடூனில் படமாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











