Andhagan: பிரஷாந்திற்கு கண் தெரியுமா.. தெரியாதா.. அந்தகன் சுவாரஸ்யம் பகிர்ந்த டைரக்டர்!

சென்னை: வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஏராளமான இளம் ரசிகைகளின் இதயத்தை கொள்ளை கொண்டவர் நடிகர் பிரஷாந்த். தொடர்ந்து ஜீன்ஸ் உள்ளிட்ட மாஸான படங்களிலும் இவர் நடித்திருந்தார். இதனிடையே சொந்த பிரச்சினைகள் காரணமாக சில காலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரஷாந்த் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

தன்னுடைய அப்பாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரஷாந்த். நீண்ட காலங்களாக இந்த படம் ரிலீசுக்கு தவித்து வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 9ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த ப்ரொமோஷன்களில் பிரசாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

Prashanth Andhagan movie tamil cinema


நடிகர் பிரஷாந்த்: நடிகர் பிரஷாந்த் நீண்ட காலங்களுக்கு பிறகு அவரது அப்பா தியாகராஜனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் நடித்துள்ள படம் அந்தகன். அந்தாதூன் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகி உள்ளது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் அதை ஒட்டிய ரிலீஸ் உள்ளிட்டவை தாமதமான நிலையில் ஒருவழியாக வரும் 9ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தங்கலான் உள்ளிட்ட மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள படங்கள் அன்றைய தினம் ரிலீசாகவுள்ளதால் ஒரு வார காலத்திற்கு முன்னதாக அந்தகன் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தகன் படம்: அந்தகன் படத்திற்காக பிரஷாந்த் மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களை மேற்கொண்டு வருகிறார். அவர் விஜய்யின் கோட் படத்தில் நடித்துள்ளதும் அந்தகன் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த பேட்டிகள் உள்ளிட்டவற்றை கொடுத்து வருகிறார் பிரஷாந்த். இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பிரஷாந்த், இயக்குனர் தியாகராஜன், சமுத்திரகனி, பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.

கண் தெரியுமா?: நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்ட நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரில் சில காட்சிகளில் கண் தெரிந்தவராகவும் சில காட்சிகளில் கண் தெரியாதவரை போலவும் பிரஷாந்த் காணப்படுவதாகவும் உண்மையில் அவருக்கு கண் தெரியுமா தெரியாதா என்றும் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க பிரஷாந்த் முயன்ற நிலையில் அவருக்கு பதிலாக இந்த கேள்விக்கு பதிலளித்து இருந்தார் தியாகராஜன். பிரசாத்திற்கு கண் தெரியுமா தெரியாதா என்பதுதான் இந்த படத்தின் ட்விஸ்ட் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீடிக்கும் சந்தேகம்: படத்தில் பிரஷாந்துடன் இணைந்துள்ள கேரக்டர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த சந்தேகம் தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கும் என்றும் இதன் எதிர்பார்ப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் என்றும் தியாகராஜன் கூறியுள்ளார். இதையடுத்து படத்தில் கண் தெரியாதவராக நடிப்பதற்காக பிரஷாந்த் மேற்கொண்ட மெனக்கெடல்கள் குறித்தும் பிரசாந்த் பகிர்ந்துள்ளார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோட் படம் குறித்து கேள்விகளை தவிர்க்குமாறு முன்னதாக கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தகன் படம் ரிலீஸ் ஆன பிறகு மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கப்படும் என்றும் அப்போது கோட் படம் குறித்த சுவாரஸ்யங்களை பிரசாந்த் பகிர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X