Actor Prashanth: வெளியானது அந்தகன் பட ட்ரெயிலர்.. மீண்டும் களமிறங்க தயாராகும் பிரஷாந்த்!

சென்னை: நடிகர் பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, கார்த்திக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அந்தகன் படம் நீண்ட காலங்களாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பாலிவுட்டின் அந்தாதுன் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் அந்தகன் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. படத்தில் கண் தெரியாத பியானிஸ்ட்டாக நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அவரின் இசையால் அனைத்து தரப்பினரும் கவரப்படுவதாக இந்த ட்ரெய்லரில் காணப்படுகிறது.

Prashanth Andhagan movie the greatest of all time movie Tamil cinema

நடிகர் பிரஷாந்த்: நடிகர் பிரசாந்த் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வந்தவர். ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்தவர். இடையில் சில சொந்த பிரச்சினைகள் காரலணமாக இவர் படங்களில் நடிக்காமல் விலகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது அப்பா தியாகராஜன் எழுதி இயக்கியுள்ள அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகியுள்ளது.

அந்தகன் பட ட்ரெயிலர்: முன்னதாக கடந்த 2010ம் ஆண்டில் பிரெஞ்சின் குறும்படத்தை மையமாக கொண்டு அந்தாதுன் வெளியான நிலையில், இந்தப் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரஷாந்துடன் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நீண்ட காலங்களாக உருவாகிவந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தற்போது படத்தின் ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கண் தெரியாதவராக பிரஷாந்த்: அந்தகன் படத்தில் கண் தெரியாதவராக பிரசாந்த் காணப்படுகிறார். திரில்லர் ஜானரில் இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது படத்தின் ட்ரெயிலர் மூலம் தெரிய வருகிறது. பிரசாந்த்திற்கு கண் தெரியுமா தெரியாதா என்பது குறித்து அடுத்தடுத்த காட்சிகளில் மாற்று கருத்துக்கள் ஏற்படுகிறது. சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிகிறது. நடிகர் கார்த்திக்கும் படத்தில் நடித்துள்ள நிலையில் அவர் படத்தின் வில்லனாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் பியானிஸ்டாக பிரஷாந்த் நடித்துள்ள நிலையில் அவர் தனது இசையால் அனைத்து தரப்பினரையும் ஈர்ப்பதாகவும் படத்தின் டிரெயிலரில் காணப்படுகிறது.

ஆகஸ்ட் மாத ரிலீஸ்: ஆகஸ்ட் மாதம் எந்த தேதியில் படம் ரிலீசாகும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பை படக் குழுவினர் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். படத்தை பிரஷாந்தே தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு பிரஷாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X