அடுத்தடுத்த கேள்வி.. பொளேர்னு பதில் சொன்ன பிரசாந்த்.. அந்தகன் டீமின் ஜாலி வீடியோ:
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில்,தியாகராஜன் இயக்கி உள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
படம் வெளியாவதை முன்னிட்டு, படத்தின் ப்ரோமோஷனுக்காக எமது பிலிமி பீட் சேனலுக்கு நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோர் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் நீண்ட நாள் கழித்து சினிமாவிற்கு வந்த போதும், என் ரசிகர்கள் கொடுக்கும் அன்பை பார்த்து பூரித்துப்போனேன். அவர்களின் அன்பும் சப்போட்டும் எனக்கு கிடைத்து இருக்கிறது. அவர்களின் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பிரியா ஆனந்த், இத்தனை நாள் கழித்து அவர் வந்தாலும், இவரை ரசிகர்கள் கொண்டாட காரணம், இவர் நடித்த படங்கள் தான் என்றார்.
அனைவருமே டாப் நடிகர்கள்: இதைத்தொடர்ந்து அந்தகன் படம் குறித்து பேசிய பிரசாந்த், இந்த படத்தில் நடித்த அனைவருமே, டாப் நடிகர்கள். அந்த கதாபாத்திரத்திற்காகவே அவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். இதனால், படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார்கள் என்றார்.தொடர்ந்து, ராப்பிட் பயர் ரவுண்டில் தொகுப்பாளர் கேட்ட அடுத்தடுத்த கேள்விக்கு, படபடவென்று பதிலளித்தார் நடிகர் பிரசாந்த். இத்தொடர்ந்து, பிடித்த நடிகர்கள், பிடித்த படம் குறித்து மூன்று பேரும் ஜாலியாக பேசி மகிழ்ந்தனர். இந்த வீடியோ இதோ.



Click it and Unblock the Notifications











