Winner 2: மீண்டும் இணையும் மூவர் வெற்றிக் கூட்டணி.. விரைவில் வின்னர் 2 பட அப்டேட்!
இயக்குநர் சுந்தர் சி, பிரசாந்த், வடிவேலு கூட்டணியில் உருவாகி கடந்த 2003ம் ஆண்டு வெளியான வின்னர் படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களின் ஃபேவரிட்டாக அமைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன் 2 மற்றும் கலகலப்பு 3 படங்களை இயக்க உள்ள சுந்தர் சி அடுத்ததாக வின்னர் 2 படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சுந்தர் சி, பிரசாந்த் மற்றும் வடிவேலு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுவும் படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போதே ஏற்படுத்தியுள்ளது.

வின்னர் படம்: நடிகர் பிரசாந்த் 90களின் காலகட்டத்தில் மிகவும் பிசியான நடிகராக வலம் வந்தவர். தொடர்ந்து பல ஆண்டுகள் ஹீரோவாக பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்தவர். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவரது பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்த், இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து கடந்த 2003ம் ஆண்டில் வின்னர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிரண் இணைந்திருந்தார். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மற்றும் பிரசாந்த் -வடிவேலு காம்பினேஷனில் இந்த படத்தின் காமெடி மிக சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
வின்னர் 2 பட அறிவிப்பு?: ஆக்ஷன் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் தற்போதும் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்து வருகின்றன. எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காத காமெடியை இந்த படத்தில் சுந்தர் சி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக நடிகர் பிரஷாந்தும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் வின்னர் 2 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர் சி -பிரசாந்த் காம்பினேஷனில் உருவாக உள்ள இந்த படத்தில் வடிவேலு இல்லாமலா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மூவர் கூட்டணி: இந்நிலையில் இந்த மூவர் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் மூவரும் சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறக்குறைய 12 ஆண்டுகள் கழித்து சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிக சிறப்பான விமர்சனங்களை மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தையும் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
விரைவில் அறிவிப்பு: அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன் 2 மற்றும் கலகலப்பு 3 படங்களை சுந்தர் சி இயக்கவுள்ளார். இந்நிலையில் பிரசாந்தின் வின்னர் 2 படத்தின் அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இந்த படங்களை ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் சுந்தர் சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதே போல நீண்ட காலங்களாக தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்த பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆண்டிலேயே இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவரை ரசிகர்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அவரது இந்த ரீ என்ட்ரி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











