பிரதாப் போத்தன் பகிர்ந்த ஸ்டெப்னி வீடியோ வைரலாகிறது!

சென்னை : தென்னிந்திய திரைப்படத் துறையில் நடிகர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டு வெற்றிகரமாக வலம் வரும் பிரதாப் போத்தன், தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்துறையில் மிகப் பிரபலமாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு இவர் பகிர்ந்துள்ள ஸ்டெப்னி வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட

நூற்றுக்கும் மேற்பட்ட

இந்திய திரைப்படத் துறையில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். இவர் நடிகராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்து உள்ளார்.

பாலுமகேந்திரா இயக்கத்தில்

பாலுமகேந்திரா இயக்கத்தில்

முதன் முதலில் மலையாள திரைப்படங்கள் மூலம் அறிமுகமான பிரதாப் போத்தன் தகர என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரதாப் போத்தன் இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

இயக்குனராகவும் திகழ்ந்து

இயக்குனராகவும் திகழ்ந்து

தமிழில் தொடர்ந்து வறுமையின் நிறம் சிகப்பு, மூடுபனி போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகர் என நிரூபித்து வந்த பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பல படங்களை இயக்கி சிறந்த இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார்.

முன்னணி கதாநாயகர்கள்

முன்னணி கதாநாயகர்கள்

தமிழில் ஜீவா, மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, மை டியர் மார்த்தாண்டன் போன்ற பல வெற்றிப் படங்களை பல முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்கி இயக்குனராகவும் வெற்றி வலம் வந்துள்ளார்.

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

இவ்வாறு நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டு தென்னிந்திய திரைப்பட துறையில் வெற்றிகரமாக வலம் வரும் பிரதாப் போத்தன் சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசும்படியாக இருந்தது.

பழைய வீடியோக்களை

பழைய வீடியோக்களை

லாக்டவுன் சூழ்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் பல்வேறு போட்டோக்கள் மற்றும் பழைய வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இரண்டு அர்த்தங்களை

இரண்டு அர்த்தங்களை

அந்தவகையில் பிரதாப் போத்தன் சமீபத்தில் தனது பேஸ்புக்கில் ஸ்டெப்னி என்ற வசனத்தை கொண்டுள்ள வீடியோவை பதிவிட்டிருந்தார். காமெடி நடிகர் சாம் ஆண்டன் நடித்துள்ள படத்தில் இடம்பெறும் காட்சியான அந்த வீடியோ ஸ்டெப்னிக்கு இரண்டு அர்த்தங்களை கொண்டு அவர் ஆவேசமாக பேசும் வீடியோவை கலாய்த்து பதிவிட்டிருந்தார்.

தனது பாணியில் கலாய்த்து

தனது பாணியில் கலாய்த்து

இவ்வாறு ஸ்டெப்னியைப் பற்றி பேசுகின்ற அந்த வீடியோ காட்சி மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாக வந்திருக்க வேண்டியது ஆனால் இந்த நடிகர்கள் பேசிய விதத்தில் இந்த ஸ்டெப்னி வசனங்கள் தற்போது காமெடியாக மாறிவிட்டது என தனது பாணியில் கலாய்த்து இந்த பதிவை போட்டிருந்தார். இவ்வாறு தான் ரசித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த பிரதாப் போத்தன் பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X