பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கிய பிரபல நடிகரின் 2 வயது மகள் மரணம்

By Siva

மும்பை: தொலைக்காட்சி நடிகர் பிரதிஷ் வோராவின் 2 வயது மகள் திடீர் என்று இறந்துவிட்டார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பிரதிஷ் வோரா. அவருக்கு 2 வயதில் மகள் இருந்தார். அவர் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் பொம்மையை வைத்து விளையாடியுள்ளார்.

Actor Pratish Voras two-year-old daughter is no more

அப்பொழுது ஒரு பிளாஸ்டிக் பொம்மையை குழந்தை விழுங்கிவிட்டது. பொம்மை குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்துவிட்டது. இந்த தகவலை பிரதிஷ் வோரா உறுதி செய்துள்ளார்.

மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தையின் உடல் மும்பையில் இருந்து விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

குழந்தையை இழந்து வாடும் பிரதிஷுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரதிஷ் தற்போது பியார் கே பாபட் தொலைக்காட்சி தொடரில் நந்து குப்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவர் கிரைம் பாட்ரோல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X