சினிமாவில் களமிறங்கி கலக்க தயாராகும் நடிகர் பிரேமின் மகன் கௌசிக்!

சென்னை: நடிகர் பிரேம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் விக்ரம் வேதா சைமன் தான். பிரேமை நாம் சிறந்த துனை நடிகராக பல படங்களில் பார்த்திருப்போம். இவரது மகனான கௌசிக் சுந்தரம் தற்போது சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார் .

கௌசிக் சுந்தரம் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக ஏவிஎம் தயாரிப்பில் உருவாக்கபட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'நிம்மதி உங்கள் சாய்ஸ்'ல் நடித்திருப்பார்.

actor prem son all set to become hero

இவர் சாய் சுரேஷ் இயக்கத்தில் உருவான குங்கும பொட்டு கவுண்டர் படத்தில் சத்யராஜின் மகனாக சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருப்பார். அந்த படத்தில் சத்யராஜ், ரம்பா,கவுண்டர் மணி,கரண் மற்றும் கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருப்பார்கள்.

actor prem son all set to become hero

இதற்கு பிறகு சினிமாவில் நடிக்காத கௌசிக் கிரிக்கெட்டில் தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார். தனது திறமையின் மூலம் தேசிய அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார். மீண்டும் சினிமா ஆசை அவரை தொற்றி கொள்ள இயக்குனர் படிப்பை படித்து விட்டு ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் .

actor prem son all set to become hero

அதற்கு பின் எம் .அறிவழகன் இயக்கத்தில் உருவான அடுத்தசாட்டை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .இந்த படத்தில் சமுத்திரகனி, அதுல்யா, தம்பி ராமையா ஆகியோருடன் நடித்து இருந்தார் .அடுத்தடுத்து தனது நடிப்பு திறனை மெருக்கேற்றி கௌசிக் தொடர்ந்து சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்படுகிறது .

actor prem son all set to become hero

சமீபத்தில் கௌசிக் சுந்தரம் பற்றி ஒரு தனியார் நாளிதழில் வந்த பேட்டியில் இவருக்கு குட்டி கமல் என்று தலைப்பு வைக்கபட்டு வெளியிடப்பட்டது .இவர் மென்மேலும் நல்ல நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி மேலே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இவர் அடுத்த சாட்டை படத்தில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் மிக சரியான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.இதே போல் தனது அடுத்தடுத்த படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

actor prem son all set to become hero

ஒவ்வொரு தந்தையும் தான் வெற்றி பெற்றதை விட தன் மகன் மிக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று தான் மிகவும் ஆசை படுவார்கள் . அந்த வகையில் பிரேம் அவர்கள் தன் மகனுக்காக எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல் மிக அதிகமானது. இந்த சினிமா உலகம் எத்தனையோ வாரிசு நடிகர்களை கொண்டாடி உள்ளது. அதே வரிசையில் கௌசிக் ஒரு நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துவோம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X