தடபுடலாக நடந்த பிரேம்ஜியின் நிச்சயதார்த்தம்.. நேரில் வாழ்த்திய நண்பர்கள் குழு!

சென்னை: கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்து முரட்டு சிங்கிளாக சுற்றிக்கொண்டு இருந்த பிரேம்ஜிக்கு இன்று திருமணம் நடக்க இருக்கும் நிலையில், அவரின் நிச்சயதார்த்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

premji amaran indhu

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்திருந்தார் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்திருந்தார.

premji amaran indhu

பிரேம்ஜி அமரன்: மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது. சிம்புக்கு கம்பேக் கொடுத்த மாநாடு படத்திலும் நடித்திருந்தார். தற்போது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கி G.O.A.T படத்திலும் பிரேம்ஜி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

premji amaran indhu

முரட்டு சிங்கிள்: 44 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்தார். தற்போது அவர் இந்து என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அவர்களுக்கு இன்று திருத்தணியில் நடைபெற உள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் பிரேம்ஜி பட்டுவேட்டி கட்டிக்கொண்டு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தத்தில், சென்னை 600028 படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

premji amaran indhu
premji amaran indhu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X