மனைவியுடன் திருச்செந்தூரில் தரிசனம் செய்த பிரேம்ஜி.. எல்லாம் குட் நியூஸ்தான்!

திருச்செந்தூர்: தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக இருந்து சமீபத்தில் சம்சாரியாக மாறியவர் இயக்குநர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. இவருக்கு திருமணம் நடக்குமா என்ற கேள்வி ஒருகட்டத்தில் சினிமா நிகழ்ச்சிகளில் எல்லாம் விவாதிக்கப்பட்டது. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலாசுப்ரமணியம் கூட, கங்கை அமரனிடம், விரைவில் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியிருந்தார். பிரேம்ஜிக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னையில் பிரமாண்டமான வரவேற்பும் நடைபெற்றது. இப்படியான நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி தனது மனைவி இந்துவுடன் இணைந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

கோட் படத்தின் வெற்றியை அடுத்து பிரேம்ஜி இந்தக் கோவிலுக்கு வந்துள்ளார். விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர். படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளையும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளையும், 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளையும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது.

premgi premgi amaran goat

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படம். சமீபகாலங்களில் ஒரு படத்தின் வெற்றியை வசூல்தான் தீர்மானிக்கின்றது என்கின்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி இருந்தும், கோட் படத்தை வசூல் ரீதியாகவும் நாட்கள் ரீதியாகவும் படத்தை திரையரங்குகளில் வெற்றிப் படமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இருந்தனர். குறிப்பாக விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் ரிலீஸ் ஆன படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.

படக்குழு: படம் ரிலீஸ் ஆன முதல் சில நாட்களில் படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடினர். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

premgi premgi amaran goat

கோட் வெற்றி: படத்தில் பிரேம்ஜி நடித்தது மட்டும் இல்லாமல், விசில் போடு பாடலை ரீ மிக்ஸ் செய்துகொடுத்துள்ளார். மேலும் படத்தில் இடம் பெற்ற சொர்க்கமே என்றாலும் பாடலின் ரீமிக்ஸில் சவுண்ட் மிக்ஸ் செய்து கொடுத்ததும் பிரேம்ஜிதான். அதேபோல், படம் முழுவதும் பின்னணி இசை கோர்ப்பதிலும் பிரேம்ஜி பணியாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல் படத்தின் கதை டிஸ்கஷனிலும் பிரேம்ஜி அங்கம் வகித்துள்ளார். இப்படியான நிலையில் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மனைவி இந்துவுடன் இணைந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

premgi premgi amaran goat

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X