Actor Premgi: மாப்பிள்ளை ரெடி.. அழைப்பிதழும் ரெடி.. திருமணத்திற்கு தயாரான பிரேம்ஜி!

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் என்பதும் வெங்கட் பிரபுவின் தம்பி என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 44 வயதை கடந்த நிலையிலும் முரட்டு சிங்கிளாகவே திரிந்து கொண்டிருந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் கடந்த ஜனவரியில் புத்தாண்டையொட்டி தான் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார் பிரேம்ஜி.

சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் தற்போது பிரேம்ஜியின் திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் இந்த பத்திரிகை பாரம்பரிய முறைப்படி காணப்படுவது ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறது.

Premgi The greatest of all time tamil cinema

நடிகர் பிரேம்ஜி: நடிகர் பிரேம்ஜி தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துவரும் சூழ்நிலையில் பிரேம்ஜியும் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 44 வயதான நிலையிலும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி திருமணத்திற்கு கடந்த ஜனவரியிலேயே தயாராகிவிட்டதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை இவர் திருமணம் செய்யவுள்ளார்.

Premgi The greatest of all time tamil cinema

பிரேம்ஜி திருமணம்: தொடர்ந்து இவரது திருமணம் ஜூன் ஒன்பதாம் தேதி நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமண பத்திரிகை தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான குடும்பத்தினரின் திருமணங்களில் அச்சடிக்கப்படும் பாரம்பரியமான பத்திரிகை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய திருமணங்களில் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் வகையில் மிக அதிகமான விலையில் பத்திரிகைகள் அச்சடிக்கப்படுகின்றன. அந்த வகையில் பிரேம்ஜிக்கும் தனியாக கிராண்டான பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை.

வெளியான பத்திரிகை: ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பத்திரிகையில் பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமணம் குறித்த தகவல்கள் சிறப்பான முறையில் காணப்படுகின்றன. வரும் ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9 மணி முதல் 10,30 மணிக்கும் பிரேம்ஜி -இந்து திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிகையில் காணப்படுகிறது. திருத்தணி முருகன் கோயிலில் இந்த திருமணம் நடக்கவுள்ளதாகவும் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. படங்களில் நடிப்பதுடன் மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றிய பிரேம்ஜிக்கு நீண்ட நாட்களாகவே பெண் பார்த்து வந்த சூழலில் தற்போது சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை அவர் திருமணம் செய்யவுள்ளார்.

பிரேம்ஜிக்கு குவியும் வாழ்த்துக்கள்: இந்த பத்திரிகையில் கங்கை அமரனின் அண்ணன் இளையராஜா குறித்த எந்த தகவலும் இல்லை. அதனால் அவர் இந்த திருமணத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த திருமணம் நடக்கவுள்ள சூழலில், கோலிவுட்டின் முக்கியமான கொண்டாட்டமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்நிலையில் இந்த பத்திரிகையை பார்த்த ரசிகர்கள், பிரேம்ஜிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X