Premgi: வெங்கட்பிரபு யூனிவர்ஸ்.. GOAT சிங்கிள் குறித்து பிரேம்ஜி சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர்விஜய் -வெங்கட்பிரபு காம்பினேஷனில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் சூட்டிங்கைவெங்கட்பிரபு திட்டமிட்டு வருகிறார். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

GOAT படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய நிலையில், போஸ்டர்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதனிடையே இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் வாய்சில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. லிரிக் வீடியோவாக பாடல் வெளியாகியுள்ளது. இதில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்களும் காணப்படுகின்றனர்.

Actor Premgi hails his brother s GOAT movie opens up about VP Universe


நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இதையொட்டி விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது மாஸ்கோவில் உள்ளனர். இதன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருந்தார்.

GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்: இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவருவதாகவும் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துவரும் விஜய்க்கு ஸ்நேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஜோடிகளாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் அடுததடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக பாடல் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தது படக்குழு.

Actor Premgi hails his brother s GOAT movie opens up about VP Universe

விஜய் பாடிய பாடல்: இந்நிலையில் விஜய், பிரேம்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிளை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட்டனர். நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ளார். இதனால் முன்னதாக இந்தப் பாடல் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும்வகையில் கேம்பெயின், மைக் உள்ளிட்ட வார்த்தைகள் இதில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது யுவனின் பார்ட்டி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை விஜய் பாடியுள்ள சூழலில், அவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆடியுள்ளனர்.

வெங்கட் பிரபு யூனிவர்ஸ்: இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ள படத்தின் நடிகரும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி, வெங்கட்பிரபுவின் யூனிவர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரது யூனிவர்ஸ் துவங்கப்படுமா மற்றும் அதில் படத்தின் மற்ற நடிகர்கள் இணைவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்கட்பிரபுவின் அடுத்தடுத்த படங்களில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X