Premgi -Indhu marriage: புது மாப்பிள்ளைக்கு.. பாட்டு பாடி.. டான்ஸ் ஆடி அசத்திய பிரேம்ஜி!
திருத்தணி: நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்து திருமணம் இன்றைய தினம் திருத்தணி முருகன் கோயிலில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபோகத்தில் பிரேம்ஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றிருந்தனர். விரைவில் பிரேம்ஜியின் கல்யாண ரிசப்ஷன் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் இதையொட்டிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருமணத்தையொட்டி முன்னதாக பிரேம்ஜி மற்றும் இந்துவிற்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. அதில் வைபவ், ஜெய் உள்ளிட்ட வெங்கட் பிரபுவின் கேங் இணைந்திருந்தனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளன.

நடிகர் பிரேம்ஜி -இந்து திருமணம்: நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்து திருமணம் இன்றைய தினம் அவரது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நட்புகள் சூழ நடந்து முடிந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த திருமணம் தற்போது மிகச் சிறப்பாக திருத்தணி முருகன் கோயிலில் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக பிரேம்ஜி -இந்து ஜோடியின் நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்த நிலையில் இவர்களின் ரிசப்ஷன் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக முன்னதாக பிரேம்ஜியின் அண்ணனும் இயக்குநருமான வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். மணப்பெண் இந்து மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் வங்கியில் ஊழியராக பணி புரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருத்தணியில் திருமணம்: பிரேம்ஜிக்கு தற்போது 44 வயது ஆவதாகவும் அவருக்கும் மணமகள் இந்துவுக்கும் 20 வயது வித்தியாசம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திருமணம் காதல் திருமணம் தான் என்று முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் முரட்டு சிங்கிளாகவே திரிந்து கொண்டிருந்த பிரேம்ஜி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது அவரது ரசிகர்களையும் அவரது கேங்கையும் மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தியுள்ளது. திருத்தணியில் நடந்த திருமணம் மற்றும் முன்னதாக நடந்த நிச்சயதார்த்தம் ஆகியவற்றில் நடிகர்கள் வைபவ், ஜெய் உள்ளிட்ட அவரது கேங் பங்கேற்றுள்ளது.
பாட்டு பாடி.. டான்ஸ் ஆடி அசத்தல்: இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது பிரேம்ஜி மணப்பெண் இந்துவுடன் இணைந்து மேடையில் பாடலை பாடி அசத்தியுள்ளார். இதேபோல விஜய்யின் குத்துப்பாட்டிற்கும் அவர் நடன அசைவுகளை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். பிரேம்ஜி நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் சிறந்த பாடதராகவும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பல இசை ஆல்பங்களை பாடியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய திருமணத்தின் போது அவர் பாட்டு பாடி டான்ஸ் ஆடி அசத்தியுள்ளது அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
சாமி தரிசனம்: இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே திருமணம் நிறைவடைந்தவுடன் மணமக்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர். இதையடுத்து கோயில் பிரகாரத்தையும் சுற்றி வந்து வழிப்பட்ட அவர்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். மேலும் பிரேம்ஜி திருமணத்தில் பங்கேற்க வந்திருந்த நடிகர்களை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டனர்.


Click it and Unblock the Notifications











