கடைசியா ஒரு மாலை விழுந்திருக்கு கழுத்துல.. வெரி குட்.. பிரேம்ஜியை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகர் பிரேம்ஜி புதிய கெட்டப்பில் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகிறார்கள்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி. 2003ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் அண்ணன் இயக்கும் படங்களில் நிச்சயம் இவருக்கு ஒரு கேரக்டர் உண்டு என கேரண்டியாக சொல்லலாம்.

அஜித்துடன் மங்காத்தா

அஜித்துடன் மங்காத்தா

அந்தளவுக்கு தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்துள்ளார். முன்னணி ஹீரோக்களின் படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் பிரேம்ஜி அஜித்தின் மங்காத்தா படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்புவுடன் மாநாடு

சிம்புவுடன் மாநாடு

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திலும் பிரேம்ஜி நடித்து வருகிறார். 42 வயதான நடிகர் பிரேம்ஜிக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக பெண் தேடி வருகின்றனர். ஆனாலும் இதுவரை ஒரு பெண்ணும் செட் ஆகாமல் இருந்து வருகிறது.

அம்மா மரணம்

அம்மா மரணம்

இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தை கங்கை அமரன் அண்மையில் தெரிவித்திருந்தார். தனது தாயை இழந்துள்ள பிரேம்ஜி அவரது நினைவாலேயே வாடுவதாக கூறிய கங்கை அமரன் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக கூறினார்.

கையில் ருத்ராட்சை மாலை

கையில் ருத்ராட்சை மாலை

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி புதிய கெட்டப்பில் உள்ள போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கையில் ருத்ராட்சை மாலை, கழுத்தில் பூமாலை என புதிய லுக்கில் உள்ளார். மேலும் நெற்றியில் பட்டை குங்குமம் என்றும் உள்ளார் பிரேம்ஜி.

நித்தியானந்தவின் வீடியோ

பிரேம்ஜியின் இந்த போட்டோவை பார்த்த அவரது அண்ணன் வெங்கட் பிரபு, கைக்கூப்பி கும்பிடும் ஈமோஜிகளை ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த பிரேம்ஜி, ஆசீர்வாதம் செய்வது போல் நித்தியானந்தாவின் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

கடைசியா ஒரு மாலை

கடைசியா ஒரு மாலை

பிரேம்ஜியின் இந்த நியூ புரஃபைல் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கடைசியா ஒரு மாலை விழுந்திருக்கு கழுத்துல.. வெரி குட்.. என பதிவிட்டு அவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதை கிண்டலடித்துள்ளனர்.

கிளம்பிட்டீங்க போல

கிளம்பிட்டீங்க போல

பிரேம்ஜியின் புதிய போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்பா என்ன ஆச்சு.. இப்படி ஆயிட்டே என கேட்டுள்ளார். மேலும் சிலர் கோவாவுக்கு கிளம்பிட்டீங்க போல என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: premgi பிரேம்ஜி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X