Premgi: அதுக்கு மட்டும் நோ.. மனைவி இந்து குறித்து பிரேம்ஜி ஓபன்.. ஆனாலும் மனுஷன் விடல்லயே!
நடிகர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருபவர் பிரேம்ஜி. தன்னுடைய அண்ணனின் இயக்கத்தில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் கங்கை அமரனின் இளைய மகனாக பிரேம்ஜி, இசையமைப்பாளராகவும் மாறி கெத்து காட்டி வருகிறார்.
முரட்டு சிங்கிள் என கெத்தாக வலம்வந்துக் கொண்டிருந்த பிரேம்ஜிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்து என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ள பிரேம்ஜி, அடுத்தடுத்து தன்னுடைய மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

நடிகர் பிரேம்ஜி: பிரபல இயக்குநர் கங்கை அமரனின் இளைய மகன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி என அடுத்தடுத்த பெருமைகளை பெற்றுள்ள பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். இவர் அதிகமாக தன்னுடைய அண்ணன் வெங்க்ட் பிரபுவின் இயக்கத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திலும் இவருக்கு முக்கியமான கேரக்டர் அமைந்திருந்தது. முரட்டு சிங்கிள் என 40 வயதை கடந்தும் கெத்து காட்டிக் கொண்டிருந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இந்து என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
பிரேம்ஜி -இந்து திருமணம்: பழனி கோயிலில் இவர்களின் திருமணம் நெருங்கிய சொந்தங்கள், நட்புகள் சூழ நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய மனைவியுடன் அடுத்தடுத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் பிரேம்ஜி, இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய பேட்டிகளையும் அவர் பகிர்ந்து வருகிறார். அவர் தன்னுடைய மனைவிக்கு சமைத்து போடும் வீடியோக்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தன. இதனிடையே தன்னுடைய மனைவி இந்து குறித்து பிரேம்ஜி வெளியிட்டுள்ள இன்டர்வியூ வீடியோவும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
மனைவி குறித்து பிரேம்ஜி: இந்த பேட்டியில் தனக்கு ப்ரை உணவுகள்தான் அதிகமாக பிடிக்கும் என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. மீன் குழம்பு, & பிரை, சிக்கன் குழம்பு & பிரை உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவேன் என்றும் தன்னுடைய மனைவியை காட்டிலும் தான் சிறப்பாக சமைப்பேன் என்றும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வீட்டில் அனைத்து முடிவுகளையும் தன்னுடைய மனைவிதான் எடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ள பிரேம்ஜி, அவரிடம் அனைத்து விஷயங்களும் பிடிக்கும் என்றும் ஆனால் தன்னை பார்ட்டி செய்ய அவர் அனுமதிக்காதது பிடிப்பதில்லை என்றும் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
பார்ட்டி பண்ணும் பிரேம்ஜி: முன்னதாக நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி செய்து என்ஜாய் செய்ததாகவும் ஆனால் தற்போது 11 மணியானாலே அவரிடம் இருந்து போன் வந்து விடுவதாகவும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார். பிரேம்ஜி என்றாலே பார்ட்டிதான் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்த நிலையில் தற்போது அது மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனாலும் அவர் அந்த நடைமுறையை இன்னும் மாற்றாமல்தான் உள்ளார். வரும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இரவு 12 மணிக்கு பிரேம்ஜியுடன் இணைந்து பார்ட்டி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏகே ஈவென்ஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்த இசை விருந்து மாலை 6 மணிக்கே துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











