நடிகர் விஜய்: ஒரு நிமிஷத்துலயே சர்ப்பிரைஸ் ஸ்டார்ட் ஆயிடும்.. கோட் படம் குறித்து பிரேம்ஜி அலப்பறை!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், அதன் பிரமோஷன்களை படக்குழுவினர் தெறிக்க விட்டு வருகின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிரேம்ஜி, வைபப், லைலா, அரவிந்த் உள்ளிட்ட பலரும் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை முன்வைத்து வருகின்றனர்.
விஜய்யின் கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மூலம் அதை மேலும் படக்குழுவினர் எகிற வைத்து வருகின்றனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் எப்போதுமே தன்னுடைய படங்களின்மூலம் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து விடுவார். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூலுக்கு எப்போதுமே குறைவிருக்காது. விஜய் என்பது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு எமோஷனாக காணப்படுகிறார். அவரும் தன்னுடைய படங்களில் ரசிகர்களை கவரும் அனைத்து விஷயங்களையும் இணைத்து விடுவார். இந்நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள கோட் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் தாறுமாறாக உருவாகியுள்ளது.
நட்சத்திர பட்டாளம்: இந்தப்படத்தில் பிகில் படத்தை தொடர்ந்து அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். படத்தில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய மாஸாக அமைந்துள்ளது. மேலும் படத்தில் அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களையும் இணைத்துள்ளார் வெங்கட் பிரபு. இவர்கள் அனைவருக்கும் படத்தில் எந்தமாதிரியான கேரக்டர்கள் அமையும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு நிமிஷத்துலயே சர்ப்பிரைஸ்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வைபவ், பிரேம்ஜி, லைலா, அரவிந்த் உள்ளிட்ட பலரும் படம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பேட்டியொன்றில் பேசியுள்ள பிரேம்ஜி, படம் துவங்கிய ஒரு நிமிடத்திலிருந்தே சர்ப்பிரைஸ்கள் துவங்கிவிடும் என்று கூறியுள்ளார். படத்தில திரிஷா, சிவகார்த்திகேயன், தோனி இவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேம்ஜி, இன்னும் சில தினங்கள் காத்திருக்குமாறு தெரிவித்துள்ளார்.
மனம் துடிக்கிறது: படத்தின் சுவாரஸ்யங்கள் குறித்து பேச மனம் துடிப்பதாகவும் ஆனால் சொல்ல முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கோட் படத்தில் இடம்பெறும் சர்ப்பிரைஸ்களை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சர்ப்பிரைஸ்களை திரையரங்குகளில் 1000 பேருடன் சேர்ந்து பார்க்கும்போது கிடைக்கும் ஆரவாரம் மிகச்சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தியேட்டரை அலறவிடுவார்கள் என்றும் அதற்காகத்தான் தான் வெயிட்டிங் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











