உனக்கு 18 வயதுதான்.. சாப்பிடாமல் விடமாட்டேன் - காதலர் தினத்தில் பிரேம்ஜியின் வெறித்தனமான ப்ரோபோஸ்
சென்னை: காதலர் தினத்தில் எல்லோரும் ப்ரோபோஸ் செய்துகொண்டிருக்க நடிகர் பிரேம்ஜி செய்திருக்கும் ப்ரோபோஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி ஆவார். இவர் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும்கூட. எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் வைக்காத பிரேம்ஜி வாழ்க்கையை மிகவும் ஜாலியாக ஓட்டிக்கொண்டிருப்பவர் என்ற பெயர் எடுத்தவர். வெங்கட் பிரபு இயக்கும் படத்திலும் தவறாமல் இடம்பிடித்துவிடுவார்.

மங்காத்தாவில் பிரேம்ஜி அமரன்
பிரேம்ஜி அமரன் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அடையாளமாக இருப்பது மங்காத்தா படம்தான். அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் ப்ளாக் ப்ஸ்டர் ஹிட்டானது. படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அதில் அஜித்துடன் இணைந்து பிரேம்ஜி செய்த காமெடிகளும், பிரேம்ஜியின் நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் மட்டுமில்லை இசையமைப்பாளரும்
பிரேம்ஜி அமரன் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர் ஆவார். வெளிநாட்டில் இசை படிப்பை படித்த அவர் தமிழில் சில படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படி அவர் இசையமைத்த அவள் பெயர் தமிழரசி படத்தில் இடம்பெற்ற அது ஒரு காலம் அழகிய காலம் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜியின் புதிய பார்ட்டி
வெங்கட்பிரப் இயக்கும் படங்களுக்கு பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பார். அப்படி பாண்டிங் இருவருக்குள்ளும் இருக்கிறது. அதேசமயம் தனது தம்பியே இசையமைப்பாளராக இருக்கும்போது எதற்காக அவரை ஒரு படத்தில்கூட வெங்கட் பயன்படுத்திக்கொள்வதில்லை என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. அதனை போக்கும்விதமாக அவர் இயக்கியிருக்கும் பார்ட்டி படத்தில் பிரேம்ஜி அமரனை இசையமைக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

காதலர் தினத்துக்கு பிரேம்ஜி செய்திருக்கும் ப்ரோபோஸ்
தன்னை முரட்டு சிங்கிள் என்றே பிரகடனப்படுத்திக்கொள்பவர் பிரேம்ஜி. அதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பல ட்வீட்களை பதிவு செய்திருக்கிறார். உலகமே காதலர் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்று பிரேம்ஜியும் ஒரு ப்ரோபோஸ் செய்திருக்கிறார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், இரண்டு மதுபாட்டில்களுக்கு முன் நிற்கும் அவர், "ஹேப்பி வேலண்டைன்ஸ் டே. எனக்கு தெரியும் உனக்கு 18 வயதுதான் ஆகிறது என்று. இன்று உன்னை சாப்பிடாமல் விடமாட்டேன்" என கூறுகிறார். அதேபோல் மற்றொரு ட்வீட்டில்,பிப்ரவரி மாதத்தில் 29,30 31 தேதிகளை நீக்கியதுபோல் பிப்ரவரி 14ஆம் தேதியையும் நீக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு ட்வீட்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











