மங்காத்தா பிரேம்ஜி போட்ட "மாரியாத்தா" வீடியோ!

சென்னை: நடிகர் பிரேம்ஜி போட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும் தனது அண்ணன் இயக்கும் படத்தில் ஒரு கேரக்டரில் கண்டிப்பாக நடித்து விடுவார் பிரேம்ஜி.

இவருக்கு 40 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சிங்கிள் எனக் கூறிக்கொண்டு சிங்கமாக சுற்றிவருகிறார் பிரேம்ஜி.

டிவிட்ஸ்

டிவிட்ஸ்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள பிரேம்ஜி அவ்வப்போது சிங்கிளாக இருப்பதன் அட்வான்டேஜ்கள் குறித்த டிவிட்களையும் மீஸ்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

முரட்டு சிங்கிள்

முரட்டு சிங்கிள்

சமீபத்தில் மலையாள நடிகை பிரியா வாரியரின் மீம்மை வெளியிட்டு முரட்டு சிங்கிள் என பதிவிட்டிருந்தார். அந்த மீம் வைரலானது. மங்காத்தா' படத்தில் அஜித் பிரேம்ஜியை சுடும்போது குண்டு அவரது கோட் பட்டனில் பட்டுத் தப்பிப்பார் பிரேம்ஜி. இந்த கான்செப்ட்டில் மீம் உருவாகியிருந்தது.

மெலோடி பாடல்

மெலோடி பாடல்

இந்நிலையில் கிரேட் எஸ்கேப் என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி. அன்பான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்ற மேலோடியான பாடலுக்கு ஒரு மனைவி ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

கோவை சரளா வடிவேலு

கோவை சரளா வடிவேலு

அதாவது, தனது கணவனை போட்டு பொளந்துள்ளார் அந்த மனைவி. கோவை சரளா வடிவேலுவை முடியை பிடித்து குலுக்கி இழுத்து போட்டு துவைக்கும் ஸ்டைலில் உள்ளது அந்த வீடியோ.

வெளு வெளுவென வெளுப்பு

வெளு வெளுவென வெளுப்பு

மெத்தையில் இழுத்து தள்ளி மிதி மிதியென மிதித்துள்ளார் அந்த பெண். கோபம் குறையாத அவர் கும்மாங்குத்து குத்துகிறார். பின்னர் கையில் கிடைத்த வாட்டர் கேனை கொண்டு வெளு வெளு என வெளுக்கிறார்.

தப்பியோடிய கணவர்

தப்பியோடிய கணவர்

இதனால் பிழைத்தால் போதும் என்று எண்ணிய கணவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஊர்ந்தபடியே வேக வேகமாக கிச்சனுக்குள் ஓடி கதவை மூடிக்கொள்கிறார். இப்படியா உள்ளது அந்த வீடியோ.

மாரியாத்தா வீடியோ

தனக்கு திருமணமாகத நிலையில் கிரேட் எஸ்கேப் என கூறி அந்த மாரியாத்தா வீடியோவை வெளியிட்டியிருக்கிறார் மங்காத்தா பிரேம்ஜி. இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளதோடு அதிகளவு ஷேரும் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X