ஃபைனலி.. தாலிக்கட்டும் வீடியோவை வெளியிட்ட பிரேம்ஜி.. முடிஞ்சுடுச்சா? பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை - நடிகர் பிரேம்ஜி ஷேர் செய்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் பிரேம்ஜி, தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுல் ஒருவர் ஆவார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், அண்ணன் இயக்கும் படத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதுவரை வல்லவன், சென்னை 28, சத்தம்போடாதே, சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்தா, போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பொண்ணு செட் ஆகல
கடைசியாக சிம்பா படத்தில் நடித்திருந்தார் பிரேம்ஜி. தற்போது ஆர்கே நகர், டக்கர், ராங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரேம்ஜி. 41 வயதை கடந்துள்ள நடிகர் பிரேம்ஜிக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக பெண் தேடி வருகின்றனர். ஆனாலும் இதுவரை ஒரு பெண்ணும் செட் ஆகவில்லை.

குசும்பு வீடியோ
இதனால் அடிக்கடி முரட்டு சிங்கிள் என போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார். அதோடு மனைவிகளிடம் கணவர்கள் அடிவாங்குவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டு தப்பிச்சுட்டேன்பா என்ற ரீதியில் கமென்ட் பதிவிட்டு வருவார். அவரது போஸ்ட்டுகளையும் கமென்ட்டுகளையும் பார்த்து சிங்கிள் பசங்க எல்லோரும் நாங்க இருக்கோம் தலைவா என வரிந்து கட்டி வருவார்கள்.

ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக பிரேம்ஜிக்கு பொண்ணு செட் ஆயிடுச்சு சீக்கிரமே கல்யாணம் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனாலும் அதனை உறுதிப்படுத்த வேண்டிய பிரேம்ஜி, இன்னமும் சிங்கிள்தான் என போஸ்ட் போட்டு அதகளப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பிரேம்ஜி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபைனலி..
அதாவது மணமேடையில் மணப்பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளையான பிரேம்ஜி தாலி கட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த காட்சி சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் உள்ள காட்சி ஆகும். இதனை ஃபைனலி என கேப்ஷன் கொடுத்து சில ஸ்மைலி ஈமோஜிகளையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார் பிரேம்ஜி.
புதுசுன்னு நெனைச்சுட்டோம்
இதனை பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேளை நாங்க கூட புதுசுன்னு நினைச்சுட்டோம் என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். பிரேம்ஜியின் இந்த வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்பாடா.. நா கூட புதுசுன்னு நெனைச்சு பயந்துட்டேன் மொமென்ட் என்று பதிவிட்டிருக்கிறார்.
சும்மா விடாது
பிரேம்ஜியின் வீடியோவை பார்த்த இவர், ஒரு செகன்ட் நான் கூட உண்மையோன்னு நம்பிட்டேன் என்று கலாய்க்கிறார். சிங்கிள் தவம் கலையுமா என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். முரட்டு சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது என்று வடிவேலுவின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











