பிரேம்ஜியால் லீக்கான“மாநாடு” ஓபனிங் சீன்… ரசிகர்கள் ஷாக் !
சென்னை : மாநாடு படத்தின் ஓபனிங் காட்சி லீக்காகிவிட்டது என்று கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு
மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டு இருந்தது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

பிரச்சினை முடிந்தது
மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்ற தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

5 மணி காட்சி ரத்து
ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஓபனிங் சீன்
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி, மாநாடு திரைப்படத்தின் ஓபனிங் காட்சி லீக்காகிவிட்டது என்று கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும். மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Recommended Video

இது எல்லாம் ரொம்ப ஒவர்
இந்த வீடியோவை பார்த்து கடுப்பான ரசிகர்கள், இன்னும் என்னைய நீ பைத்தியகாரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல என்று கேட்டு இது எல்லாம் ரொம்ப ஓபர். நாங்களே படம் எப்போ வரும்னு நினைச்சி கவலையில இருக்குறோம் நீங்க எங்களை கலாய்க்கிறீங்களான என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











