கொரோனா விழிப்புணர்வு... சென்னை 28 நண்பர்கள் வெளியிட்ட வீடியோ

சென்னை : கொரோனா விழிப்புணர்வுக்காக திரைத்துறையினர் தொடர்ந்து பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

சென்னை 28 படத்தின் முக்கிய நடிகர்கள் மூவர் இணைந்து தற்போது கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக நடிகர்கள் மற்றும் நடிகைகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி ரசிகர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் வீடியோ

நடிகர்கள் வீடியோ

இதன்மூலம் மக்களிடம் ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர்கள் தாமாக முன்வந்து பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசியை தாங்கள் போட்டுள்ளதாகவும் பொதுமக்களும் உடனடியாக போடும்படியும் வலியுறுத்தி வருகின்றனர்.

நண்பர்கள் வீடியோ

இந்நிலையில் சென்னை 28 படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்துள்ள நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா மற்றும் அரவிந்த் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டரில் வெளியீடு

ட்விட்டரில் வெளியீடு

இந்த வீடியோவை நடிகர் பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் பேசும் அவர், பாதுகாப்பாக இருக்கவும் மாஸ்க் அணியவும் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசும் நிதின் சத்யா, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

நிதின், அரவிந்த் கோரிக்கை

நிதின், அரவிந்த் கோரிக்கை

கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து நடிகர் அரவிந்த் பேசுகிறார். அவரும் மாஸ்க், தடுப்பூசி மற்றும் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது உள்ளிட்ட அதே கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X