பிரேம்ஜி மொரட்டு சிங்கிள்தானாம்.. அந்தப் பொண்ணுதான் விடாம.. கல்யாணத்துக்கு முன் வெளியே வந்த உண்மை

சென்னை: தமிழ் சினிமாவில் மொரட்டு சிங்கிள் என்றால் அதில் கட்டாயம் சிம்பு மற்றும் பிரேம்ஜி பெயர் இருக்கும். இதில் பிரேம்ஜிக்கு நாளை திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது. இதி தொடர்பான தகவலை ரகசியமாக வைத்திருந்த கங்கை அமரன் குடும்பத்தினர் வட்டாரத்தில் இருந்து எப்படியோ கல்யாண பத்திரிக்கை வெளியாக, அதனை யாரோ சமூக வலைதளங்களில் பகிர விஷயம் காட்டுத்தீ போல பரவியது. மேலும் பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ள பெண் குறித்தும் தகவல்கள் எக்கச்சக்கமாக ஊடகங்களில் வெளிவந்தது.

வெங்கட் பிரபு வேண்டுகோள்

இதனால் ஒருகட்டத்திற்கு மேல், பிரேம்ஜியின் அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்," இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

Premgi Venkat Prabhu Premgi marriage goat

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" "சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.

பிரேம்ஜியின் காதல் கதை

இந்நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண் குறித்த தகவல்களும், பிரேம்ஜி திருமணம் குறித்த தகவல்களும் கங்கை அமரனின் குடும்பத்திற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானதாக குறிப்பிட்டு ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், சேலத்தைச் சேர்ந்த இந்து வங்கி ஊழியராக பணியாற்றி வருகின்றார் என்றும், இருவரும் முதலில் எங்கு சந்தித்தார்கள் என்பது குறித்து இதுவரை குடும்பத்தினருக்கே தெரியவில்லையாம். சில ஆண்டுகளாக பழகிவந்த இவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இருவரில் இந்துதான் முதலில் பிரேம்ஜியிடம் காதலைச் சொன்னாராம். இந்து தொடர்ந்து பிரேம்ஜியை விரட்டி விரட்டி காதலித்து வந்தாராம். அதன் பின்னர்தான் இந்துவின் காதலுக்கு பிரேம்ஜி க்ரீன் சிக்னல் காட்டி, அதனை பெற்றோர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்று தற்போது திருமணத்திற்கு வந்துள்ளதாம்.

எது எப்படியோ கோலிவுட்டின் மொரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு நாளை திருமணம். எல்லாரும் வாழ்த்துவோமே. ஃபிலிமி பீட் சார்பாகவும் பிரேம்ஜிக்கும் இந்துவுக்கும் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X