இதுதான் ஃபர்ஸ்ட் டைமாம்.. பிரேம்ஜி செய்த விஷயத்தை வீடியோவாக பதிவிட்ட மனைவி!

சென்னை: நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்தார். இதை பெருமையாக பல இடங்களில் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார் பிரேம்ஜி. முருகர் கோயிலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

முன்னதாக தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்திலும் இவர் இணைந்திருந்தார்.

premgi indhu premgi salem

நடிகர் பிரேம்ஜி: நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குநர் & இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி என பல சிறப்புகளை பெற்றவர். தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் பாடி லேங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தவர். இதை பெருமையாகபல பேட்டிகளில் பேசி வந்த பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நட்பாக துவங்கிய இவர்களது சினேகம், காதலாக மாறி திருமணத்தில் நிறைவடைந்துள்ளது.

கோயிலில் நடந்த திருமணம்: திருத்தணி முருகர் கோயிலில் இவர்களது திருமணம் சுற்றார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிரேம்ஜி மற்றும் இந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து வீடியோகக்களையும் ரீல்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து படங்களில் நடித்துவரும் பிரேம்ஜி, இசையமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்திலும் பிரேம்ஜி நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரது அண்ணன் இயக்கியிருந்த நிலையில், அவரது பெரியப்பா மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சமீபத்தில் மறைந்த யுவனின் தங்கை பவதாரணி இந்தப் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாடல் பாடியிருந்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாமியார் வீட்டிற்கு சென்ற பிரேம்ஜி: இதனிடையே, பிரேம்ஜியின் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக சென்று வருகிறது. இவரது மாமியார் புதிய தொழில் ஒன்றை துவங்கவுள்ளதாக சமீபத்தில் இவரது மனைவி இந்து வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இந்த தொழிலை பிரேம்ஜி பெயரிலேயே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கு பிரேம்ஜி முதல் முறையாக சென்றுள்ளார். அவர் அங்கு சென்றது மற்றும் செய்த அலப்பறைகளை அவரது மனைவி இந்து வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் முதல்முறையாக சென்ற பிரேம்ஜிக்கு ஆலம் கரைத்து வரவேற்பு நடத்தப்பட்டுள்ளது.

மனைவியுடன் ஊஞ்சலில் ரொமான்ஸ்: தொடர்ந்து அவர்கள் வீட்டில் உள்ள ஊஞ்சலில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஆடியும் பலகாரங்களை சுவைத்தும் உள்ளார் பிரேம்ஜி. தொடர்ந்து தன்னுடைய மாமியார் மற்றும் சொந்தங்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பிரேம்ஜியை டேக் செய்து வெளியிட்டுள்ளார் இந்து. இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடந்த நிலையில் விரைவில் ரிசப்ஷன் நடக்கவுள்ளதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X