Premgi: விஜய்யின் கோட் பட டி-சர்ட்டை அணிந்து சில் செய்த பிரேம்ஜி.. மனுஷன் எங்க இருக்காரு தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நடிகர் மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கில் உள்ள பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களும் படத்தில் இணைந்துள்ளனர்.

இத்தனை நட்சத்திர பட்டாளங்களை வைத்து வெங்கட் பிரபு எப்படிப்பட்ட கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் படத்தில் நடித்துள்ள நிலையில் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay The greatest of all time movie Premgi Instagram tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது விஜய் மற்றும் பிரபுதேவா இடம்பெற்றுள்ள காட்சிகளின் சூட்டிங் சென்னையில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்த ஷூட்டிங் தொடர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.

அடுத்தடுத்த பாடல்கள்: விசில் போடு என்ற அதிரடி பாடலை வெளியிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கடந்த மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி விஜய் மற்றும் பவதாரணி வாய்ஸில் சின்ன சின்ன கண்கள் பாடலையும் வெளியிட்டனர். இதன்மூலம் மறைந்த பவதாரணியின் வாய்சை ஏஐ தொழில்நுட்பத்தில் உதவியால் ரசிகர்கள் மீண்டும் என்ஜாய் செய்ய முடிந்தது. விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் பாடல் எப்போதும் மிகச் சிறப்பாக அமைந்து ரசிகர்களை கொண்டாட வைக்கும். ஆனால் இந்த படத்தின் பாடல் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அடுத்த பாடலும் மெலடியாக வெளியானதில் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர்.

பிரேம்ஜி போட்டோ: அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோட் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், நடிகர் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இதனிடையே இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. படத்தில் முக்கியமான கேரக்டர்களில் பிரேம்ஜி, வைபவ் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் திருமணம் முடித்த நடிகர் பிரேம்ஜி, தற்போது இலங்கையின் கொழும்புவில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோட் பட டி-ஷர்ட்: அதில் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கூடிய டி-ஷர்டை அவர் அணிந்துள்ளார். இந்த டி-ஷர்ட்டில் கோட் படத்தின் அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் என இருவரும் காணப்படுகின்றனர். இந்த டி-ஷர்ட்டை அணிந்துக் கொண்டு பிரேம்ஜி தனக்கே உரிய ஸ்டைலில் சிரிப்பையும் இந்தப் புகைப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யின் கோட் படத்திற்கான புரமோஷன்கள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட பலவற்றையும் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X