Don't Miss!
- News
அதிமுக தொண்டர்களின் கண்கள் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி..யாருக்கு இரட்டை இலை? எகிறும் எதிர்பார்ப்பு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாடகியை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா பிரேம்ஜி? புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை!
சென்னை : நடிகர் பிரேம்ஜி அமரன் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகி உள்ளது.
நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார்
சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். லேட்டஸ்டாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார்.
விஜய்யின்
30
ஆண்டு
திரைப்பயணம்..
சிறப்பு
டிபி
வெளியீடு..
ராஷ்மிகா,
பிரேம்ஜி
உள்ளிட்டோர்
வாழ்த்து!

நடிகர் பிரேம்ஜி அமரன்
பார்ப்பதற்கே அப்பாவி போல இருக்கும் இவர் தான் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி, எப்போதும் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொள்ளும் பிரேம்ஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவரின் திருட்டு முழிக்கே பல ரசிகர்கள் உண்டு. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா...என்ன கொடுமை சார் இதெல்லாம்... என ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது வசனத்தை சொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

எப்போதும் முரட்டு சிங்கிள்
43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என பிரேம்ஜி கூறி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார். ஆனால், பிரேம்ஜியோ இனி கல்யாணமே கிடையாது நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று சோஷியல் மீடியாவில் கூறியிருந்தார்.

காதல் கிசுகிசு
ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற படங்களில் பணியாற்றிய பாடகி வினைதாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினைத்தாவை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன் என்று கூறி இருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி இருவரும் காதலிப்பாக கூறப்பட்டது. பின்னர் அதுவெறும் வதந்தி என்று இருவரும் கூறினர்.

ரகசிய திருமணமா?
இந்நிலையில், பாடகி வினைதா பிரேம்ஜியை கட்டிப்பித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்' என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும் திருமணம் செய்து கொண்டார்களா? என்றும், இப்போது இவர்களுக்கு திருமணம் நடந்தது என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.