Premji: 10 வருஷத்துக்கு முன்னாடி அஜித்.. இப்ப விஜய் அதிகமாக செய்திருக்காரு.. வெயிட்டிங்கில் பிரேம்ஜி
சென்னை: நடிகர் விஜய் -இயக்குநர் வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகி வரும் படம் The greatest of all time. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னையில் பாடல் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்து முடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
விஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது GOAT படம். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்திலும் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்த இரு படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். முன்னதாக தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த விஜய். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் அறிமுகம் செய்திருந்தார். இதற்கான வீடியோவையும் அவர் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வெளியிட்டிருந்தார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருகிறார். அவரது அப்பாவின் இயக்கத்தில் சிறுவனாகவே அவர் சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்த நிலையில் நாளைய தீர்ப்பு படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். துவக்கத்தில் விஜய்யின் நடிப்பு மட்டுமில்லாமல் தோற்றமும் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தன்னை மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளார். ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் அளவில் விஜய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
விஜய் அரசியல் என்ட்ரி: இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட விஜய், தற்போது தளபதியாகவும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய அரசியல் என்ட்ரியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற விஜய்யின் அரசியல் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து விஜய்யின் நடிப்பில் GOAT மற்றும் தளபதி 69 படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படங்கள் அதிகமான கவனத்தை பெற்றுள்ளன. இந்தப் படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
GOAT படம்: இந்நிலையில் The greatest of all time படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தில் நடித்துவரும் பிரேம்ஜி தற்போது படம் குறித்து பேசியுள்ளார். படத்தில் இரண்டு தளபதி நடித்துள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அவர் சும்மா அடிச்சி, துவம்சம் வேற லெவல்தான் என்றும் கூறியுள்ளார். சொல்ல வார்த்தையில்லை என்றும் அதை கண்ணால் ரசிகர்கள் பார்ப்பதை காண தான் வெயிட்டிங் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தல 10 வருடங்களுக்கு முன்பு பைக் ஓட்டியதாகவும் தற்போது தளபதி வேறு ஒன்றை செய்துள்ளதாகவும் இந்த மேடையில் பேசப்பட்டுள்ளது.
GOAT படம் குறித்து பிரேம்ஜி: தொடர்ந்து பேசிய பிரேம்ஜி சும்மா வேற லெவல்தான் என்றும் கூறியுள்ளார். தான் இதுகுறித்து அதிகமாக பேசக்கூடாது என்றும் அப்படி பேசினால் ஏஜிஎஸ் நிறுவனம் தங்கள் மீது கேஸ் போட்டுவிடுவார்கள் என்றும் நகைச்சுவையுடன் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். அடுத்ததாக படக்குழுவினர் மாஸ்கோவிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு அங்கு சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











