பிரேம்ஜிக்கு பெண்ணே தரக்கூடாது.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜி மாமியார் பேட்டி!
சென்னை: இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமையைக் கொண்ட பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரேம்ஜிக்கு என்று சினிமாவில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய ஆசை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இவரின் மாமியார் பிரேம்ஜி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

பிரேம்ஜி மாமியார்: அந்த பேட்டியில் மாமியார் ஷர்மிளா, எங்களோட சொந்த ஊர் சேலம், எங்களது குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம். இதனால், தினமும் சமையல் செய்வதே, கல்யாணத்திற்கு செய்வது போல இருக்கும். சமையல் சுவையா வரவேண்டும் என்றால் அதில் போடும் மசாலா தான் முக்கியம் என்று என் மாமியார் அடிக்கடி சொல்வாங்க. இதனால், சமையலுக்கு மிளகாய்த்தூள், மசாலாவுக்கெல்லாம் வெளியில வாங்கவே மாட்டோம். வீட்டிலேயே நாங்களே தயாரிச்சிடுவோம். இதனால் எங்க வீட்டில் வைக்கும் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும்.
பிரேம்ஜி மாமிஸ் மசாலா: இந்த விஷயத்தை என் மகள் இந்து என் மருமகனிடம் சொல்ல அவர், அப்போ அதையே பிஸ்னசா செய்யலாம் என்று சொன்னார். எங்களுக்கு மிகவும் ஊக்கம் கொடுத்தார். அதனாலதான், அவரோட பேரைச் சேர்த்து ’Premgi's Mamiyar Masala’ன்னு பேர் வைத்துவிட்டோம். அவர் எங்களுக்கு மருமகனா வந்தது உண்மையிலேயே பெரிய விஷயம். ஆரம்பத்தில், பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்துவிட்டு, எனக்கு எதுவும் சரியாகபடல, இதனால், 'பொண்ணே கொடுக்கமாட்டேன்னு' சொன்னேன். கடைசியில் அவரிடம் பழகிப்பார்த்தால் தான் தெரிகிறது, தங்கமான புள்ளையா இருக்கிறார்.
தங்கமான புள்ள: பிரேம்ஜி இடம் பிடித்த விஷயமே, அவர் எப்போதும் பெரியவங்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறார். என்னை மகள் வீட்டில் என்னை எதாவது வேலை செய்ய சொன்னாக்கூட, உடனே பிரேம்ஜி தம்பி, அதையெல்லாம் அவங்களை எதுக்கு செய்ய சொல்லுற என்று கோபப்படுவார். அந்த அளவுக்கு தங்கமானவர். அவர் எனக்கு மருமகன் மட்டும் இல்ல இன்னொரு மகன் என்று மாமியார் ஷர்மிளா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











