6 மாதங்களுக்கு பிறகு.. 'ஹேர்கட் க்ளீன் ஷேவ்'.. ஆளே மாறிப்போன அஜித் பட நடிகர்.. அசந்துப்போன ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகரான பிரேம்ஜி க்ளீன் ஷேவில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரா இது என அசந்துப்போயுள்ளனர்.

Recommended Video

MOST UNDERRATED MUSIC DIRECTORS IN TAMIL CINEMA | FILMIBEAT TAMIL

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி. 2003ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் அண்ணன் இயக்கும் படங்களில் நிச்சயம் இவருக்கு ஒரு கேரக்டர் உண்டு என கேரண்டியாக சொல்லலாம்.

அஜித்துடன் மங்காத்தா

அஜித்துடன் மங்காத்தா

அந்தளவுக்கு தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்துள்ளார். முன்னணி ஹீரோக்களின் படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் பிரேம்ஜி அஜித்தின் மங்காத்தா படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்புவுடன் மாநாடு

சிம்புவுடன் மாநாடு

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்திலும் வெங்கட் பிரபு நடித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதனால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

கைலாசா போறீங்களா?

கைலாசா போறீங்களா?

நடிகர் பிரேம்ஜியும் தனது வேலையை தொடங்கியுள்ளது. 6 மாதங்களாக தாடி மீசை, நீண்ட முடி என சமூக வலைதளங்களில் மிரட்டி வந்தார். அதனை பார்த்து ரசிகர்கள் பலரும், தலைவரே நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு போகப் போகிறீர்களா என கிண்டலடித்து வந்தனர்.

6 மாதங்களுக்கு பிறகு

6 மாதங்களுக்கு பிறகு

இந்நிலையில் நடிகர் பிரேம் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் முடியை வெட்டி க்ளீன் ஷேவ் செய்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். வேலை இல்லாமல் இருந்ததால் 6 மாதங்களுக்கு பிறகு, முடி வெட்டி க்ளீன் ஷேவ் செய்திருப்பதாகவும் தற்போது வேலைக்கு திரும்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொண்ணு பார்க்கப் போறீங்களா?

பொண்ணு பார்க்கப் போறீங்களா?

இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு தாடி சூட்டாகவில்லை என்று தானே ஷேவ் செய்துவிட்டீர்கள் என கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் என்ன அண்ணே பொண்ணு பாக்க போறீங்களா என்று கேட்டும் லந்து கொடுத்துள்ளனர்.

பேச்சுலர்களின் பிதா மகன்

பேச்சுலர்களின் பிதா மகன்

41 வயதை கடந்துள்ள பிரேம்ஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது வரை முரட்டு சிங்கிளாக உள்ளார்.
அதனையும் குறிப்பிட்டு பேச்சுலர்களின் பிதாமகனே.. முரட்டு சிங்கிள்களின் முதல்வனே என குசும்பாய் கிண்டலடித்துள்ளனர். பிரேம்ஜியின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X