கலாய்க்கும் அர்னால்டு... மெர்சலாகும் ஷங்கர் - பேஸ்புக்கில் கலகல

சென்னை: ஐ திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு, விழாவில் பாதியிலேயே வெளியேறியது தான் இப்போ டாக் ஆப் தி டவுண்.

இது தான் அர்னால்டு பாதியிலேயே கிளம்பிச் சென்றதற்கான காரணம் என ஆளாளுக்கு ஒரு பக்கம் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வேறு விதமாக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், பிரேம்ஜி அமரன் தனது பேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் ஷங்கரும், அர்னால்டும் பேசிக் கொள்வதாக கற்பனையான உரையாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது :-

ஐ இன் ஐ....

ஐ இன் ஐ....

அர்னால்டு தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் இப்போது ஐ ஆல்பம் வெளியீட்டு விழாவில் இருக்கிறேன்' எனப் பதிவு செய்துள்ளார்.

ஆல்பம் இல்லை சார்...

ஆல்பம் இல்லை சார்...

இதைப் பார்த்துப் பதறிப் போன ஷங்கர், ‘சார், அது ஆல்பம் இல்லை. என் படப் பாடல்கள் வெளியீட்டு விழா என விளக்கமளிக்கிறார்.

என்னது படத்தில் பாடல்களா...?

என்னது படத்தில் பாடல்களா...?

ஷங்கரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடையும் அர்னால்டு, ‘என்ன படத்தில் பாடல்களா?' என ஆச்சர்யமாகக் கேட்கிறார். ‘ஆமாம், 7 பாடல்கள் என பதிலளிக்கிறார் ஷங்கர்.

ஐ சீ

ஐ சீ

உடனே அர்னால்டு, ‘ஐ சீ...' என்கிறார். அதற்கு ஷங்கர், ‘இல்லையில்லை, நீங்கள் ஐ படத்தைப் பார்க்க முடியாது. இன்று பாடல்களைக் கேட்க மட்டும் தான் முடியும் என்கிறார்.

முதல் பாடல்...

முதல் பாடல்...

அப்படியா, இப்படத்தின் முதல் பாடல் என்ன என அடுத்த கேள்வியை முன்வைக்கிறார் அர்னால்டு. அதற்கு, ‘மெர்சிலாயிட்டேன்' எனப் பதிலளிக்கிறார் ஷங்கர்.

மசாலா பாடலா...

மசாலா பாடலா...

ஓ மார்ஸ் பத்திய பாடலா. ஏலியன்கள் நடிக்கிறார்களா ? இல்லையென்றால் மசாலாவுக்குப் பெயர் போன இந்தியாவில் மசாலாப் பற்றியப் பாடலா எனப் புரியாமல் கேட்கிறார் அர்னால்டு.

நானே மெர்சலாயிட்டேனே...

நானே மெர்சலாயிட்டேனே...

உண்மையிலேயே மெர்சலாகும் ஷங்கர், ‘என் நிலைமையைப் பாருங்கள், இது தான் மெர்சலாயிட்டேன்' என மிரண்டு போய் பதிலளிக்கிறார்.

கலாய்ச்சேன் மச்சி...

கலாய்ச்சேன் மச்சி...

ஷங்கர் உண்மையிலேயே மெர்சலாயிட்டார் என்பதை கன்பார்ம் செய்து கொள்ளும் அர்னால்டு, ‘சும்மா கலாய்ச்சேன். மெர்சலாகாத மச்சி' என சிரித்துக் கொண்டே கூறுவதாக முடிகிறது அந்த உரையாடல்.
உண்மையில் மெர்சலாக வேண்டியது நாம தான் பாஸ்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X