Actor Premji: வேற லெவல்ல இருக்கும்.. தளபதி 68 அப்டேட் சொன்ன பிரேம்ஜி!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படம் விறுவிறுப்பாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் சூட்டிங் மீண்டும் துவங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
மேலும் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட வெங்கட்பிரபுவின் கேங்கும் படத்தில் இணைந்துள்ளது. அதிகமான நட்சத்திரங்களின் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகி வருகிறது. புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதை படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் புத்தாண்டில் விஜய் படத்தின் அப்டேட்டுடன் துவங்க ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் பாடல் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக நடிகர் வைபவ் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலையும் ரசிகர்களுக்கு மாஸான என்டர்டெயின்மெண்டையும் கொடுத்திருந்தன. லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் சூட்டிங்கும் துவங்கப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி ஆகியோர் கமிட்டாகி நடித்து வருகின்றனர். படத்தின் டைட்டில் சாங், சென்னையில் எடுத்து முடிக்கப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
படம் குறித்து பேசிய பிரேம்ஜி: தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேப் விடப்பட்டுள்ள நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது பிரேம்ஜி பேசியுள்ளார். அவரிடம் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சூட்டிங் சிறப்பாக நடந்து வருவதாகவும் எக்ஸ் தளத்தில் தயாரிப்பு தரப்பிற்கு அக்கவுண்ட் உள்ளதாகவும் அவர்களிடம் கேட்டால் அப்டேட் கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படம் எப்படி வந்துள்ளது என்றும் பிரேம்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
வேறு லெவலில் உருவாகும் தளபதி68: படம் வேறு லெவலில் வந்துள்ளதாகவும் தளபதி விஜய், வெங்கட்பிரபு மற்றும் யுவன் காம்பினேஷனில் படம் உருவாகி வருவதாகவும் இதற்கு மேல் என்ன வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகவுள்ள நிலையில் அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் டைட்டில் G.O.A.T என்று வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டைட்டிலுக்கு முன்னதாக படத்தின் டைட்டில் பாஸ் எனவும் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
மாஸ் காட்டுவாரா வெங்கட் பிரபு: விஜய் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அதற்காக நடிப்பிலிருந்து சில காலங்கள் விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு மங்காத்தா உள்ளிட்ட சிறப்பான படங்களை கொடுத்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான அவரது மாநாடு படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் விஜய்யுடன் அவர் இணைந்துள்ளதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் தந்தை மற்றும் மகன் கேரக்டர்களில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











