பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த மனைவி.. என்னம்மா இப்படி பண்றீங்களேமா.. கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கு 9ந் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி இந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியை கிண்டலடிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார் கங்கை அமரன். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய இவர். தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இவரின் தம்பி தான் பிரேம்ஜி, இவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார். திருமண வயதை கடந்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராக இருந்த பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ந் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சென்னை 28 படத்தில் நடித்த ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் கலந்து கொண்டனர். இதில் இளையராஜா, யுவன் கலந்து கொள்ளவில்லை, இது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து யுவன் விளக்கம் கொடுத்து இருந்தார்.
பிரேம்ஜி திருமணம்: முரட்டு சிங்கிளான பிரேம்ஜிக்கு ஒருவழியாக திருமணமானது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரைத்துறை நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. 45 வயதான பிரேம்ஜி, 25 வயதான இந்துவை திருமணம் செய்து கொண்டார் என்றும், இத்தனை வயசு வித்தியாசமா என்றும் இணையத்தில் செய்திகள் வெளியானது. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தான் முதலில் கொளுத்திப் போட்டார். இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ் யாருக்கு எத்தனை வயசு வித்தியாசம் இருந்தால் உங்களுக்கு என்ன என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
பிரேம்ஜியை கிண்டலடித்த இந்து: இப்படி வயசு வித்தியாசம் குறித்து இணையத்தில் ஒரு தகவல் பரவிக் கொண்டு இருக்கும் நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 1998ம் ஆண்டு பிரேம்ஜி எடுத்த போட்டோவையும், அதே ஆண்டு எடுக்கப்பட்ட தன்னுடைய போட்டோவையும் வெளியிட்டுள்ளார். நாம் இருவரும் ஏன் முன்பே சந்திக்கவில்லை" என்று ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார். என்னம்மா இதெல்லாம், அட நல்லா கிண்டலடித்து வைத்து காதல் வசனம் பேசுறீங்களா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
வங்கியில் வேலை: இந்து, சேலத்தை சேர்ந்தவர் என்றும் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்க்கும் சாதாரண பெண் தான் என்றும் அந்த வங்கியில் தான், பிரேம்ஜி கணக்கு வைத்து இருந்தார் என்றும், வங்கி வேலை விஷயமாக சென்ற போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, பின் பெரியவர்கள் சேர்ந்து பேசி திருமணம் செய்து வைத்ததாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











