பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்!

கொச்சி : தமிழ் மலையாளம் என பிரபலமான முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிரித்விராஜ்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய "லூசிபர் " அதிக வசூலை அள்ளி பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டதுடன் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பிரித்விராஜ் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

முன்னணி நடிகராக

முன்னணி நடிகராக

மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரித்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

ஸ்டைலான வில்லன்

ஸ்டைலான வில்லன்

இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான "கனா கண்டேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரித்விராஜ், அதில் ஸ்டைலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பல பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

எதார்த்தமான படங்களில்

எதார்த்தமான படங்களில்

கனா கண்டேன் திரைப்படத்துக்கு பிறகு பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், மொழி என பல நேரடி தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பரிச்சயமான பிரித்விராஜ் மலையாளத்தில் பல எதார்த்தமான படங்களில் நடித்து பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளார்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "ஐயப்பனும் கோஷியும்" திரைப்படம் மலையாள ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றதையடுத்து இப்பொழுது இந்த திரைப்படம் தமிழில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் விரைவில் உருவாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நீண்ட போராட்டத்திற்கு

நீண்ட போராட்டத்திற்கு

வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்ற பிரித்விராஜ் கொரானா பரவல் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டதை அடுத்து பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தார். 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிரித்விராஜ் இப்பொழுது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

செக்ஸியான டயப்பர்

செக்ஸியான டயப்பர்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் மிகவும் குட்டி பயனாக உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அப்பாவின் கையில் தவழ்ந்தவாறு இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரித்விராஜ் அதற்கு " என்னுடைய படு செக்ஸியான டயப்பர் " என கலகலப்பான தலைப்புடன் பதிவிட்டுள்ளதை பார்த்த இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இந்த அழகான க்யூட் புகைப்படத்தை பார்த்து "சூப்பர் ஸ்பெஷல்" என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X