நாங்களும் காதலிக்கிறோம்..விக்கி, நயன்தாராவுக்கு போட்டியா போட்டோ போட்ட பிருத்விராஜ்!
மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரித்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.
இயக்குநர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான "கனா கண்டேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரித்விராஜ், கனா கண்டேன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், மொழி என பல நேரடி தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு க்யூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இணையத்தில் அந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது

நடிகர் பிருத்விராஜ்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் பிருத்விராஜ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும், ஜன கண மன உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. வித்தியாசமான கதைகளையும் ரொம்ப போல்டான படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் பிருத்விராஜ். அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் பழங்குடியின பெண் நஞ்சியம்மா பாடிய பாடல், தேசிய விருதை பெற்றது.

சலார்
கேஜிஎஃப் படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் எனும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடித்து வருகிறார். கே.ஜி.எஃப்' படத்தைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதலுடன் பிறந்த நாள் வாழ்த்து
இந்நிலையில், பிருத்விராஜ் தனது மனைவி சுப்ரியாவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், இனிய பிறந்த நாள் பார்ட்னர் நீ, என் கையைப்பிடித்து என்னுடன் இருந்தால், எந்த சண்டையும் கடினமில்லை..எந்தப் பயணமும் நீண்டது இல்லை.. என காதலுடன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த நட்சத்திர தம்பதிகள் தற்போது லண்டனில் விடுமுறை கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

வெற்றிக்குப்பின்னால்
நடிகர் பிருத்விராஜ் சுப்ரியாவை காதலித்து 2011ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஆலம்கிருதா என்ற மகள் இருக்கிறார். பிருத்விராஜின் திரையுலக வெற்றிக்குப்பின்னால் அவரது மனைவி சுப்ரியா இருக்கிறார். மேலும், பிருத்வி ராஜூக்கு சொந்தமான பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தையும் சுப்ரியா கவனித்துக்கொண்டு அதை விளம்பரப்படுத்தும் வேலையையும் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











