ரஜினிகாந்த் சூப்பர் ஆக்டர்.. அவரை வைத்து சூப்பர் காமெடி படம் எடுக்கணும்.. பிரபல நடிகரின் ஆசை!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் சிறப்பான நடிகராக உள்ளார். அவரது அனைத்துப் படங்களும் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்களுக்கு வசூலை ஈட்டித் தருகின்றன.

Recommended Video

பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த Prithviraj| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat

அவர் தன்னுடைய ஸ்டைல் மற்றும் கதைக்களங்களின் மூலம் சிறப்பான நடிகராக இருந்து வருகிறார்.

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க முன்னணி இயக்குநர்கள் அனைவரும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக தனது வாழ்க்கையை துவங்கியவர். தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். பல கரடுமுரடான பாதையை கடந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். பலரும் தங்களின் படங்களில் இவரை இயக்க விருப்பம் தெரிவித்தனர்.

முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி

முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி

தொடாந்து ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தார். பாட்ஷா, படையப்பா என இவரது ஹிட் வரிசைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகின. அனைத்து இயக்குநர்களும் இவரது பெஸ்ட்டை கொண்டுவந்தனர்.

ரசிகர்கள் கொண்டாடிய ரஜினி

ரசிகர்கள் கொண்டாடிய ரஜினி

ஒரு கட்டத்தில் இவரது ஒவ்வொரு படங்களும் இவரது படத்திற்கே போட்டியாக மாறின. அந்த அளவிற்கு இவரது ஒவ்வொரு படமும் வெற்றியை கொடுத்தன. இவர் அனைவரும் விரும்பும் நடிகராக மாறிய நிலையில் ரசிகர்கள் இவரை, இவரது படங்களை கொண்டாடினர்.

இயக்குநர்களின் விருப்ப நடிகர்

இயக்குநர்களின் விருப்ப நடிகர்

இந்நிலையில் தற்போதும் அனைத்து இயக்குநர்களும் இவரை இயக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ராஜமௌலி, வெங்கட் பிரபு, பிரஷாந்த் நீல் என வெற்றிப்பட இயக்குநர்களின் விருப்பப்பட்டியலில் முதலில் ரஜினிதான் இருக்கிறார். தற்போது இந்த வரிசையில் பிரபல லூசிபர் படத்தை மலையாளத்தில் இயக்கிய பிரபல நடிகர் பிரத்விராஜ் இணைந்துள்ளார்.

பிரித்வியின் கடுவா படம்

பிரித்வியின் கடுவா படம்

அவரது கடுவா படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழில் இந்தப் படத்தின் பிரமோஷனில் பிரித்வி மற்றும் ஹீரோயின் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் இன்றைய தினம் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ரஜினியை இயக்க ஆசை

ரஜினியை இயக்க ஆசை

அப்போது ரஜினியை இயக்கும் தன்னுடைய ஆசையை அவர் வெளிப்படுத்தினார். ரஜினி இந்திய அளவில் சூப்பர்ஸ்டாராக இருந்தபோதிலும் அவரிடம் சிறப்பான காமெடி சென்ஸ் காணப்படுவதாகவும் அவர் கூறினார். பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் கமலின் காமெடி சென்ஸ் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது.

ரஜினி சிறப்பான நடிகர்

ரஜினி சிறப்பான நடிகர்

ஆனால் ரஜினியை அதுபோன்ற முழுநீள காமெடி படத்தில் யாரும் நடிக்க வைக்க முற்படவில்லை என்றும் பிரித்வி தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உள்ளே சிறப்பான நடிகர் ஒருவர் உள்ளதாகவும் பிரித்வி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதனிடையே சூப்பர்ஸ்டாரை வைத்து இதுபோன்ற முழுநீள காமெடி படத்தை எடுக்க தான் விரும்புவதாகவும் பிரித்வி கூறியுள்ளார்.

ரஜினியை இயக்க விருப்பம்

ரஜினியை இயக்க விருப்பம்

அந்தப் படத்தை தான் இயக்கவும் வாய்ப்புள்ளதாகவும் மற்றவர்களும் இயக்கலாம் என்றும் பிரித்வி கூறியுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய லூசிபர் படம் மிரட்டலாக அமைந்தது. நடிப்பு, தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகத் திறமையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் பிரித்விராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X