ரஜினிக்கு காமெடி சென்ஸ் அதிகம்… திடீரென புகழ்ந்து பேசிய நடிகர்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு காமெடி சென்ஸ் அதிகம் என பிரபல நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.

Recommended Video

பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த Prithviraj| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா... சின்ன குழந்தையும் சொல்லும் பாட்டைப் போல ரஜினிகாந்த் எவர் கிரீன் ஹீரோவாகவே இருக்கிறார். காலா படத்தில் வரும் 'இது காலா கில்லா' என்ற வசனத்தால் மெய்சிலிர்த்துப் போன இளசுகளும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களாகி விட்டார்கள்.

ரஜினிகாந்தின் நடிப்பு, ஸ்டைல் பற்றி பலரும் புகழ்ந்து நாம் கேட்டிருப்போம். ஆனால் அவரின் காமெடி சென்ஸ் பற்றி இதுவரை யாரும் குறிப்பிட்டு சொன்னதில்லை.பிரபல நடிகர் பிரித்விராஜ், ரஜினி பற்றி கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பிருத்விராஜ். இவர் நடிப்பில் உருவான கடுவா என்ற திரைப்படம் ஜூன் 28ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சில பிரச்சனைகளால், ஜூலை 7ந் தேதி படம் வெளியாகும் என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்திருந்தார்.

கடுவா

கடுவா

இப்படத்தில் விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், அர்ஜுன் அசோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். கடுவா படத்தை வாஞ்சிநாதன், ஜனா, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். படத்தை பிருத்விராஜ் புரொடக்‌ஷனும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் பான் இந்தியா படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

காமெடி சென்ஸ்

காமெடி சென்ஸ்

இந்நிலையில், கடுவா திரைப்படத்தின் ப்ரமோஷன் பணியில் பிஸியாக இருக்கும் பிருத்விராஜ், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில், கமல் சாரின் காமெடி சென்ஸ் பற்றி பலருக்குத் தெரியும், பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் ரஜினி சாருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது என்றார். மன்னன் திரைப்படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் அடித்த லூட்டியை மறக்கவே முடியாது என்று ரஜினியை பிருத்விராஜ் புகழ்ந்து பேசினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார்

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார்

நடிகர் பிருத்விராஜ், மோகன் லாலை வைத்து லூசிஃபர், ப்ரோ டாடி என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அத்தோடு லூசிஃபர் 2 மற்றும் டைசன் என்கிற இரண்டு படங்களை இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார். பிருத்விராஜ் தற்போது, ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ரன்னி என்ற சிறிய நகரத்தில் நடந்து வருகிறது. ஆடுஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தை பிளெஸ்ஸி இயக்கி வருகிறார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 30 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்திற்கு இசையமைத்து மலையாள சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X