Prithviraj: நான் டைரக்டர் ஆனது என் பொண்டாட்டிக்கும் பொண்ணுக்கும் பிடிக்கவில்லை.. பிரித்விராஜ் ஓபன்!
கொச்சி: நடிகர் பிரித்விராஜ் அடுத்தடுத்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பரிணாமங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் இவர் தன்னை சிறப்பாக இணைத்துவரும் நிலையில் கடந்த ஆண்டில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்தது.
இந்நிலையில் அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து பிரித்விராஜ் இயக்கி, நடித்துள்ள எம்புரான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் மார்ச் மாதம் 27ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா கொச்சியில் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர். நடிப்பிலும் தயாரிப்பிலும் மாஸ் காட்டிய நிலையில் ஒரு கட்டத்தில் இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்தது. இந்த படத்தின் திரில்லிங் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய சொத்தாக அமைந்தது. இந்த படத்தில் மோகன்லாலின் உதவியாளராக சையத் என்ற கேரக்டரில் பிரித்விராஜும் நடித்திருந்தார்.
எம்புரான் படம்: இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகமாக எம்புரான் படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் உள்ளிட்ட பல விஷயங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் வரும் மார்ச் மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக எம்புரான் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் கொச்சியில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

எம்புரான் டீசர் வெளியீடு: டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் மம்முட்டி, மஞ்சு வாரியர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாளத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக விடாமுயற்சி பட இயக்குநர் மகிழ் திருமேனியும் கலந்து கொண்டு பல விஷயங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் எம்புரான் படத்தின் இயக்குநருமான பிரித்விராஜ் தான் இயக்குநராக மாறியது தன்னுடைய மனைவி சுபத்ரா மற்றும் மகளுக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்பத்திற்கு பிடிக்காத விஷயம்: இயக்குநர் என்பது மிகப்பெரிய டாஸ்க்காக உள்ள நிலையில் அதற்காக முழு நேரத்தையும் தான் செலவழிக்க வேண்டியிருந்ததால் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தான் செலவழிக்கும் நேரம் என்பது இல்லாமலேயே போனது என்றும் இதனால் அவர்கள் இருவருக்கும் தான் இயக்குநர் ஆனது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் பிரித்விராஜ் நேற்றைய தினம் மேடையில் பேசியபோது தெரிவித்துள்ளார். ஆனாலும் தன்னுடைய பேஷனை கருத்தில் கொண்டு அவர்கள் தனக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்ததாகவும் பிரித்விராஜ் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதற்கு தன்னுடைய மனைவி மற்றும் மகளுக்கு அவர் நன்றியையும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மாஸ் காட்டிய எம்புரான் டீசர்: இந்த படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட நிலையில், இதில், படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான லூசிஃபர் படம் மலையாளத்தில் ரிலீசாகி பின்பு தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட செய்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகமான எம்புரான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் ரிலீசாகவுள்ளது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை எம்புரான் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











